»   »  பொன்ராம் - சிவகார்த்திகேயன் படத்தில் சிம்ரன்... அடுத்த ரவுண்ட் ஸ்டார்ட்ஸ்!

பொன்ராம் - சிவகார்த்திகேயன் படத்தில் சிம்ரன்... அடுத்த ரவுண்ட் ஸ்டார்ட்ஸ்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சிம்ரன் தனது அடுத்த ரவுண்டை இந்த முறை ரொம்பவே அழுத்தமாகத் தொடங்கி இருக்கிறார்.

பெரிய பேனர், நடிகர்கள், இயக்குநர்கள் என அவரைத் தேடி நல்ல வாய்ப்புகளாக வருகின்றன.

அப்படி வந்த வாய்ப்பில் ஒன்றுதான் சிவகார்த்திகேயன் - பொன்ராம் கூட்டணியில் உருவாகும் புதிய படம்.

மூன்றாவது முறையாக

மூன்றாவது முறையாக

‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்', ‘ரஜினிமுருகன்' ஆகிய வெற்றிப் படங்களைத் தொடர்ந்து சிவகார்த்திகேயன்-பொன்ராம் கூட்டணி மீண்டும் புதிய படத்தில் இணையவிருக்கிறது.

சொந்தப் படம்

சொந்தப் படம்

இப்படத்தை சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளிவந்த ‘ரெமோ' படத்தை தயாரித்த 24AM ஸ்டுடியோஸ் நிறுவனம் சார்பில் ஆர்.டி.ராஜா தயாரிக்கிறார்.

சமந்தா

சமந்தா

இப்படத்தில் கதாநாயகியாக சமந்தா நடிக்கவிருக்கிறார். காமெடி வேடத்தில் வழக்கம்போல் சூரியே நடிக்கிறார்.

சிம்ரன் - நெப்போலியன்

சிம்ரன் - நெப்போலியன்

இந்நிலையில், இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க சிம்ரன் நடிக்கவிருக்கிறார். மேலும், நெப்போலியன் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார்.

பூஜை

பூஜை

இப்படத்தின் படப்பிடிப்பு இன்று பூஜையுடன் தொடங்கியது. இதில் சிவகார்த்திகேயன், சூரி, நெப்போலியன், சிம்ரன், இயக்குனர் பொன்ராம், இசையமைப்பாளர் டி.இமான், ஆர்.டி.ராஜா, கவிஞர் யுகபாரதி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். இப்படம் சிவகார்த்திகேயனுக்கு 12-வது திரைப்படமாகும்.

English summary
Yesteryear dream heroine Simran has joined with Sivakarthikeyan - Ponram team.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil