»   »  த்ரிஷா இல்லேன்னா நயன்தாரா... கொஞ்சம் சிம்ரனும் இருக்கட்டும்!

த்ரிஷா இல்லேன்னா நயன்தாரா... கொஞ்சம் சிம்ரனும் இருக்கட்டும்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

டார்லிங் படத்தின் வெற்றி இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷின் நடிப்பு ஆர்வத்தை இன்னும் அதிகரித்திருக்கிறது.

ஜி.வி.பிரகாஷ் நடிகராக அறிமுகமான படம் ‘பென்சில்'. ஆனால், அந்தப் படம் சில காரணங்களால் தாமதமாக, அதற்குப் பிறகு இவர் நடித்த ‘டார்லிங்' படம் முந்திக் கொண்டது.

இப்போது ‘பென்சில்' படத்தை வெளியிடும் முயற்சிகளில் உள்ளனர்.

த்ரிஷா இல்லன்னா நயன்தாரா

த்ரிஷா இல்லன்னா நயன்தாரா

இந்தப் படத்துக்குப் பிறகு ஜிவி பிரகாஷ் தனது அடுத்த படமான ‘த்ரிஷா இல்லனா நயன்தாரா' படத்தின் வேலைகளில் தீவிரமாகியுள்ளார்.

சிம்ரன்

சிம்ரன்

இப்படத்தில் இவருக்கு ஜோடியாக ‘கயல்' ஆனந்தி நடிக்கிறார். ஆதிக் ரவிச்சந்திரன் என்பவர் இயக்குகிறார். இப்படத்தில் 90-களில் முன்னணி நடிகையாக வலம் வந்த சிம்ரன், முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.

ரஜினியுடன் மட்டும் இல்லை

ரஜினியுடன் மட்டும் இல்லை

ரஜினி தவிர்த்து, மற்ற முன்னணி நடிகர்கள் அனைவருடனும் ஜோடி போட்டவர் சிம்ரன். திருமணத்திற்கு பிறகு சினிமாவுக்கு முழுக்கு போடுவதாக அறிவித்தார். பின்னர் மீண்டும் நடிக்க முயன்றார். ஆனால் அவர் நினைத்தபடி வேடங்கள் கிடைக்கவில்லை.

அடுத்த ரவுண்ட்

அடுத்த ரவுண்ட்

வாரணம் ஆயிரம், ஐந்தாம் படை போன்ற சில படங்களில் நடித்தார். இப்போது ஜிவி பிரகாஷ் படம் மூலம் அடுத்த ரவுண்டுக்கு ஆயத்தமாகிறார்.

English summary
Simran is joining hands with Trisha Illanna Nayanthara crew.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil