»   »  திரைத் துளி

திரைத் துளி

Subscribe to Oneindia Tamil

சிம்ரனின் காதலர் தீபக் சென்னை விமான நிலையத்தில் அதிகாரியின் சட்டையைப் பிடித்து இழுத்து தகராறுசெய்தார். இதையடுத்து சிம்ரனையும், தீபக்கையும் ஒரு அறையில் அடைத்து வைத்து அதிகாரிகள் விசாரணைநடத்தினர்.

படப்பிடிப்புகளுக்கு தனது காதலர் தீபக்குடன் தான் வந்து செல்கிறார் சிம்ரன். நேற்று மாலை மும்பை செல்லும்விமானத்தில் தீபக்கை வழியனுப்ப வந்திருந்தார் சிம்ரன். ஆனால், விமான நிலையத்துக்குள் செல்ல நுழைவுச்சீட்டை வாங்கவில்லை.

இதையடுத்து வாசலில் காவலில் இருந்து போக்குவரத்துக் காவலர் வேணுகோபால், சிம்ரனை தடுத்து நிறுத்தினார்.டிக்கெட் எங்கே என்று கேட்டார்.

நான் ரொம்ப பிரலமான நடிகை, என் முகம் குழந்தைக்குக் கூட தெரியும், உங்களுக்கு என்னைத் தெரியாதா என்றுசிம்ரன் இந்தியில் திட்டினார். உடன் இருந்த தீபக்கும் அதிகாரியை இந்தியில் திட்டியதோடு அவரது சட்டையையும்பிடித்து மிரட்டினார்.

பின்னர் இருவருமே கைகோர்த்தபடி விமான நிலையத்துக்குள் நுழைந்தனர்.

இதையடுத்து போக்குவரத்துக் காவலர் வேணுகோபால் உயர் அதிகாரிகளிடம் மைக்கில் விவரத்தைச் சொன்னார்.உடனே அங்கு வந்த விமான நிலைய அதிகாரிகள் சிம்ரனையும், தீபக்கையும் தள்ளிக் கொண்டு சென்றனர்.

விமான நிலைய மேலாளரின் அறையில் இருவரும் சிறை வைக்கப்பட்ட இருவரிடமும் அதிகாரிகள் விசாரணைநடத்தினர். கடுமையான கேள்விகளால் குடைந்தெடுத்தனர். இருவரையும் சிறையில் தள்ளக் கூட முடியும் எனஎச்சரித்தனர்.

இதில் தீபக்குக்கு சிறப்பு திட்டு விழுந்தது. முன்னணி நடிகையுடன் வந்தால் எதை வேண்டுமானால் செய்வீர்களாஎன்று கடுமையான குரலில் அதிகாரிகள் கேள்வி எழுப்பவே, சிம்ரனும் தீப்பக்கும் மன்னிப்பு கோரினர்.

எங்களிடம் மன்னிப்பு கேட்டு வேஸ்ட், நீங்கள் அவமானப்படுத்திய போக்குரவத்துக் காவரிடம் மன்னிப்புகேளுங்கள் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதையடுத்து வேணுகோபாலிடம் போய் கலங்கிய முகத்துடன் மன்னிப்பு கேட்டார் சிம்ரன். இதையடுத்துஇருவரையும் அதிகாரிகள் விடுவித்து அனுப்பி வைத்தனர்.

சிம்ரனில் செயலால் கடுப்படைந்த விமான நிலைய ஊழியர்கள், இருவரையும் கைது செய்து நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று அதிகாரிகளிடம் கோரினர். ஆனால், அவர்களை அதிகாரிகள் சமாதானப்படுத்தி அனுப்பினர்.

Please Wait while comments are loading...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil