»   »  திரைத் துளி

திரைத் துளி

Subscribe to Oneindia Tamil

சென்னை:

நடிக்க ஒப்புக் கொண்ட தெலுங்குப் படத்தை நடிக்காமல் ஏமாற்றி வந்த நடிகை சிம்ரன்அந்தப் படத்தை நடித்து முடிக்கும் வரை வேறு எந்தப் படத்திலும் நடிக்கக்கூடாது எனசென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழ் திரைவானில் மின்னிக் கொண்டிருக்கும் பிரபல நடிகை சிம்ரன். பலஇளைஞர்களின் கனவுக் கன்னி அவர். நேருக்கு நேர், வாலி, துள்ளாத மனமும்துள்ளும், பிரியமானவளே உட்பட பல வெற்றிப் படங்களில் நடித்து தமிழ் திரையுலகில்தனக்கென தனி இடத்தை பிடித்துள்ளவர் இவர்.

தமிழ் தவிர மலையாளம், தெலுங்கு மற்றும் கன்னடப் படங்களில் நடிக்க அழைப்புகள்வந்தன. அதையும் ஏற்று பிற மொழிப் படங்களிலும் நடித்து வந்தார்.

இந்நிலையில் தெலுங்கு பட தயாரிப்பாளர் தேவி வரபிரசாத் சிம்ரனை மருகராஜ் என்றதிரைப்படத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்தார். அந்தப் படத்தின் கதாநாயகனாக சிரஞ்சீவிஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தார். பெரிய பட்ஜெட்டில் இந்தப் படத்தை எடுக்கதயாரிப்பாளர் திட்டமிட்டிருந்தார்.

ஐதராபாத்தில் மருகராஜ் படப்பிடிப்பு தொடங்கிய அன்று சிரஞ்சீவி, சிம்ரன் மற்றும்200 துணை நடிகர்கள், 100 நாட்டியக் கலைஞர்கள் பங்கு பெறும் பாடல் காட்சிபடமாக்கப்பட இருந்தது. சிரஞ்சீவி உட்பட அனைவரும் படப்பிடிப்பிற்காக தயாராகஇருந்தனர். ஆனால் சிம்ரன் படப்பிற்கு வரவில்லை. தொடர்ந்து 6 நாட்கள்காத்திருந்தும் பயனில்லை. சிம்ரன் படப்பிடிற்கு வரவே இல்லை. இதனால்தயாரிப்பாளருக்கு ரூ. 20 லட்சம் நஷ்டம் ஏற்பட்டது.

சிம்ரனின் இந்த நடவடிக்கையைத் தொடர்ந்து தயாரிப்பாளர் தேவி வர பிரசாத்சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அந்த மனுவில் சிம்ரன் தன்படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டு 6 நாட்கள் படப்பிடிற்கு வராததால் தனக்கு ரூ. 20லட்சம் நஷ்டம் ஏற்பட்டுள்ளது என்றும், சிம்ரனை தனது படத்தை நடித்து கொடுக்கஉத்தரவிடுமாறும் கூறியிருந்தார்.

மனுவை விசாரணைக்கு ஏற்றுக் கொண்ட சென்னை உயர் நீதிமன்றம் மருகராஜ்தெலுங்கு படத்தை ஒப்புக் கொண்டபடி சிம்ரன் நடித்துக் கொடுக்க வேண்டும் எனவும்,அதுவரை வேறு எந்த படப்பிடிப்பிலும் கலந்து கொள்ளக் கூடாது எனவும்உத்தரவிட்டுள்ளது.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil