»   »  திரைத் துளி

திரைத் துளி

Subscribe to Oneindia Tamil

கர்ப்பம் காரணமாகவே சிம்ரன் படத்திலிருந்து நீக்கப்பட்டார் என்பதை சிம்ரன் தரப்பு மறுத்துள்ளது.

கர்ப்பம் என்பதால் நீக்கப்பட்டதாக கதை கட்டிவிடுகிறார்கள் என்று சந்திரமுகி யூனிட் மீது பாய்கிறார்கள் சிம்ரன் தரப்பினர்.

ரஜினியின் புதிய படமான சந்திரமுகியில் பிரபுவுக்கு ஜோடியாக சிம்ரன் நடிக்க ஒப்பந்தமானார். படப்பிடிப்பு தொடங்கி ஒருவாரம் ஆன நிலையில் சிம்ரன் படத்திலிருந்து அதிரடியாக நீக்கப்பட்டார். அவர் கர்ப்பமாக இருக்கிறார் என்று காரணம்கூறப்பட்டது.

ஆனால் இப்போது நீக்கப்பட்டதற்கு காரணம் அதுவல்ல என்பது தெரிய வந்துள்ளது.

பிறகு ஏன் அவர் நீக்கப்பட்டார் என்பதற்கு படப்பிடிப்புக் குழுவினர் கூறும் காரணம் இதுதான்:

குஷால்தாஸ் கார்டனில் சிம்ரன் தொடர்பான காட்சிகள் படமாக்கப்பட இருந்தது. படப்பிடிப்பு தினத்தன்று ரஜினி, பிரபு மற்றும்இதர கலைஞர்கள் அனைவரும் ஆஜராகியிருந்தனர். சிம்ரன் மட்டும் வரவேயில்லை. நீண்ட நேரம் காத்திருந்து விட்டுபடப்பிடிப்பை கேன்சல் செய்தனர்.

வேறொரு நாளில் படப்பிடிப்பை நடத்தத் திட்டமிடப்பட்டது. அந்தத் தேதி ஒரு முறைக்கு இரு முறை சிம்ரனுக்குஅறிவிக்கப்பட்டது. அன்றைய தினமும் ரஜினி, பிரபு உட்பட அனைவரும் காத்திருந்தனர். சிம்ரன் வரவேயில்லை.

பொறுத்துப் பொறுத்து, கடுப்பாகிப் போன ரஜினி, படத்திலிருந்து சிம்ரனைத் தூக்கச் சொல்லிவிட்டார். இதுதான் உண்மை, சிம்ரன்கர்ப்பம் என்பதெல்லாம் சும்மா என்கிறார்கள் படப்பிடிப்புக் குழுவினர்.

சிம்ரன் மறுப்பு:

இது தொடர்பாக சிம்ரனைத் தொடர்பு கொண்டபோது, நான் கர்ப்பமாக இல்லை. அதே நேரத்தில் அந்தப் படத்தில் நடிக்க நான்விரும்பவில்லை என்று சிம்பிளாக முடித்துக் கொண்டார்.

கணவர் செய்த பிரச்சனை:

என்ன பிரச்சனை என்று சிம்ரனின் மேனேஜர் மற்றும் கார் டிரைவர் காமராஜை ஓரங்கட்டியபோது வேறொரு கதை கிடைத்தது.

குஷால்தாஸ் கார்டனில் சூட்டிங் நடந்தது. காட்சிப்படி பிரபுவுடன் சிம்ரன் நெருக்கமாக நடிக்க வேண்டும். எல்லோரும்சூட்டிங்கிற்கு தயாரான வேளையில், சிம்ரனின் கணவர் தீபக் வந்தார். காட்சி பற்றி தெரிந்ததும், இது போன்ற நெருக்கமானகாட்சிகளில் சிம்ரன் நடிக்க மாட்டார் என்று கூறினார்.

அவரிடம் பிரபு, சிம்ரன் ஏற்கனவே இதுபோல் நிறைய காட்சிகளில் நடித்திருக்கிறார். இதுபோன்ற காட்சிகள் சினிமாவில் சகஜம்என்று சமாதானம் பேசினார்.

அதற்கு தீபக், திருமணத்திற்கு முன்பு சிம்ரன் எப்படி வேண்டுமானால் நடித்திருக்கலாம். ஆனால் இப்போது அப்படி நடிக்க நான்அனுமதிக்க மாட்டேன் என்று கறாராகக் கூறினார். சிம்ரனும் கணவர் கூறியதற்கு சரியென்றார்.

இதனையடுத்து பேச்சுவார்த்தை வாய்த்தகராறாக மாற, சிம்ரனும் அவரது கணவரும் சூட்டிங் ஸ்பாட்டை விட்டுபோய்விட்டார்கள். இதையடுத்தே சிம்ரன் படத்தில் இருந்து நீக்கப்பட்டார். இதுதான் காரணம் என்று கூறினார்.

சிம்ரன் இப்போது மும்பையில் இருக்கிறார். நாளை மீண்டும் சென்னை வருகிறார். வந்த பின்பு பத்திரிக்கையாளர்களைச்சந்தித்தால், அவர் தரப்பு நியாயங்கள் முழுமையாகத் தெரியவரும்.

சந்திரமுகி படத்தின் கதை எப்படியோ தெரியவில்லை, படத்தைப் பற்றி வரும் கதைகள் எல்லாம் சுவாரசியமாகவே இருக்கின்றன.

சிம்ரன் கர்ப்பம்: சந்திரமுகியிலிருந்து நீக்கம்

Please Wait while comments are loading...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil