»   »  திரைத் துளி

திரைத் துளி

Subscribe to Oneindia Tamil

திரையுலகிலிருந்து விலகிவிட நடிகை சிம்ரன் தீர்மானித்துள்ளார். விரைவில் திருமணமும் செய்து கொள்ள இருக்கிறார். இதுகுறித்தஅறிவிப்பை இன்னும் ஓரிரு தினங்களில் அவர் வெளியிடுகிறார்.

தே மேரே சப்னே என்ற இந்திப் படம் மூலம் திரையுலகில் அறிகமானவர் சிம்ரன். ஆனால் அதற்குப் பிறகு இந்தியில் சான்ஸ்கிடைக்காதால் தமிழுக்கு வந்தார். ஒன்ஸ்மோர் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாகி கோலிவுட்டின் அசைக்க முடியாத ராணியானார்.

இன்றைய தேதிக்கு தமிழில் மிக அதிக சம்பளம் பெறும் நாயகியாக சிம்ரன் உள்ளார்.

நேருக்குநேர், வாலி, கண்ணெதிரே தோன்றினாள், பார்த்தேன் ரசித்தேன், பார்த்தாலே பரவசம், பம்மல் கே சம்பந்தம், பஞ்சதந்திரம் எனபவர்புல் கேரக்டர்கள் கொண்ட படங்களில் நடித்த பிரபலமடைந்தவர் சிம்ரன்.

அதோடு (பசவ)ராஜூ சுந்தரத்துடன் காதல், தங்கை மோணலின் தற்கொலை, மும்தாஜுடன் மோதல், கல்யாணமான கமலுடன் காதல் எனநடிக்க வந்து 8 ஆண்டுகளில் பரபரப்பாகவே இருந்துவிட்டார் சிம்ரன்.

இந் நிலையில் தற்போது திரை வாழ்க்கைக்கு குட்பை சொல்லத் தயாராகி விட்டார். இதனால் சமீபத்தில் புக் ஆன சிலதிரைப்படங்களிலிருந்து விலகி விட்டார். வாங்கிய அட்வான்ஸ் தொகையையும் திருப்பிக் கொடுத்திருக்கிறார்.

அதில் ஒரு தயாரிப்பாளர் ராக்லைன் வெங்கடேஷ். கர்நாடகத்தைச் சேர்ந்த இவர் தான் சிலம்பரசனை வைத்து தம் படத்தை எடுத்தவர்.இவரது தயாரிப்பில் ரவிச்சந்திரன்- சிம்ரன் நடிக்க ஒரு கன்னடப் படம் எடுக்கப்பட இருந்தது. இந்தப் படத்தின் சூட்டிங் இன்று பெங்களூரில்தொடங்குவதாக இருந்தது. இதற்காக பெங்களூரில் பிரம்மாண்டமான செட்டும் போடப்பட்டிருந்தது.

இதற்காக சிம்ரனுக்கு விமான டிக்கெட் கூட எடுக்கப்பட்ட நிலையில் நேற்று ராக்லைன் வெங்கடேசிடம் தான் வாங்கிய ரூ. 5 லட்சம்அட்வான்ஸை சிம்ரன் திரும்பத் தந்துவிட்டார்.

அதிர்ச்சியடைந்த தயாரிப்பாளர் காரணம் கேட்டபோது, விரைவில் திருமணம் செய்யவுள்ளதால் புதிய படங்களை ஒப்புக் கொள்வதில்லைஎன்று சிம்ரன் பதில் சொல்லியிருக்கிறார். என்னை தமிழ் சினிமாவில் முன்னணிக்குக் கொண்டு வந்த இயக்குனர் சூர்யாவின் நியூ படத்தைமுடித்துத் தந்துவிட்டு திரையுலகை விட்டே விலகப் போகிறேன் என்று சிம்ரன் கூற அதிர்ச்சியில் உறைந்திருக்கிறார் ராக்லைன் வெங்கடேஷ்.

உடனே பெங்களுருக்கு போன் போட்டு சூட்டிங்கை கேன்சல் செய்திருக்கிறார்.

ஓரிரு தினங்களில் தனது திருமணம் குறித்தும், திரையுலக விலகல் குறித்தும் சிம்ரனே தகவல் தருவார் என்றும் அவருக்கு நெருங்கியவட்டாரத்தில் கூறுகின்றனர். சிம்ரனுக்கும் தீபக் என்ற ஒரு தனியார் விமான பைலட்டுக்கும் இடையே லவ் இருப்பதாகக் கூறப்படுகிறது.

வீட்டில் எதிர்ப்பு இருப்பதால் அவரை சிம்ரன் எந்த நேரத்திலும் ரகசிய திருமணம் செய்யக் கூடும் என்று தெரிகிறது.

Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil