»   »  திரைத் துளி

திரைத் துளி

Posted By:
Subscribe to Oneindia Tamil

நடிகை சிம்ரனுக்கு இன்று மும்பையில் திருமண நிச்சயதார்த்தம் நடக்கிறது. வரும் மே 4ம் தேதிஅவருக்குத் திருமணம் நடக்கவுள்ளது.

ராஜூ சுந்தரத்துடன், கமலுடன் காதல் என கிசுகிசுக்கப்பட்ட சிம்ரன் சினிமாவிலிருந்து விலகப்போவதாகவும் விரைவில் திருமணம் செய்து கொள்ளப் போவதாகவும் நேற்று தெரியவந்தது.

சிம்ரனுக்கும் தீபக் என்ற பைலட்டுக்கும் காதல் என்றும் கூறப்படுகிறது.

சிம்ரனுக்கு அவர் தூரத்துஉறவினராம். இவர்களின் காதலுக்கு இருவருடைய பெற்றோரும் சம்மதம் தெரிவித்திருந்தனர்.

இப்போது திருமணமும் நிச்சயிக்கப்பட்டுவிட்டதாகத் தெரிகிறது.

இன்றே சிம்ரன்-திலீப் திருமணநிச்சயதார்த்தம் மும்பையில் நடைபெற உள்ளது.

இதைத் தொடர்ந்து வரும் மே 4ம் தேதிஇருவருக்கும் திருமணம் நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகள் முழு வீச்சில் நடந்து வருகின்றன.

திருமணத்திற்குப் பின்னர் சினிமாவில் நடிப்பதில்லை என்று சிம்ரன் முடிவெடுத்துள்ளார். "தீண்டதீண்ட", "ஒரு நடிகையின் கதை" போன்ற படங்களில் நடிப்பதற்காக வாங்கிய அட்வான்ஸ்பணத்தைக் கூட சிம்ரன் திருப்பிக் கொடுத்து விட்டார்.

ராக்லைன் புரொடக்ஷன் தயாரிப்பில் "புக்" ஆகியிருந்த ஒரு கன்னடப் படத்திற்கானஅட்வான்சையும் அவர் திருப்பிக் கொடுத்துள்ளார்.

ஆனால், இதெல்லாம் வெறும் புரளி என்றும் கூட இன்னொரு பக்கம் செய்திகள் வருகின்றன. நாளை தான்நிலைமை தெளிவாகும்.

  • சினிமாவிலிருந்து விலகுகிறார் சிம்ரன்

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil