»   »  திரைத் துளி

திரைத் துளி

Subscribe to Oneindia Tamil

சிம்ரனுக்கும் அவரது காதலர் தீபகுக்கும் வரும் டிசம்பர் 2ம் தேதி திருமணம் நடக்கிறது.

பஞ்சாபி முறைப்படி நேற்றே திருமண நலுங்குகள் தொடங்கிவிட்டன. நேற்றிரவு அவருக்கு கைகளில் மெகந்தி எனப்படும் மருதாணிக் கோலமிடப்பட்டது.

இந்த மெகந்தி பூசப்பட்ட பின் மணப்பெண் திருமணம் முடியும் வரை வெளியே வரக் கூடாதாம்.

தமிழ்த் திரையுலகினருக்கு சிம்ரனே நேரில் வந்து அழைப்பிதழ் தருவார் என்று கூறப்பட்டது. இப்போது அதற்கான வாய்ப்பேதும் இல்லாமல் போய்விட்டது.

தமிழ் திரையுலகில் மிகச் சிலருக்கு மட்டும் தனது பி.ஆர்.ஓ. மூலமாக சிம்ரன் அழைப்பிதழ்களைத் தரப் போகிறாராம். (ராஜூ சுந்தரம், கமல்ஹாசனுக்கு தரப்படுமா?)

முக்கியஸ்தர்களுக்கு தொலைபேசி மூலம் அழைப்பு விடுக்கப் போகிறாராம்.

திருமண வேலைகளில் பிஸியாகிவிட்டதால் தான் இரு தினங்களுக்கு முன் முதல்வர் வழங்கிய கலைமாமணி விருதை வாங்கக் கூட சிம்ரன் வரவில்லையாம்.

சிம்ரனுக்கு திருமணமாகப் போவதால் அந்த இடத்தைப் பிடிக்க தமிழில் நடிகைகள் இடையே பெரும் போட்டா போட்டி ஏற்பட்டுள்ளது.

Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos