For Quick Alerts
  ALLOW NOTIFICATIONS  
  For Daily Alerts

  சிம்டாங்காரன் பாடலுக்கு விளக்க உரை எழுதிய விஜய் ரசிகர்கள்! சிறப்பா செய்றீங்க!

  |
  சிம்டாங்காரன் சுவாரஸ்சியங்கள்- வீடியோ

  சென்னை: சிம்டாங்காரன் பாடலின் தூய தமிழ் அர்த்தம் வெளியாகியுள்ளது.

  சர்க்கார் திரைப்படத்தின் சிங்கிள் டிராக்கான சிம்டாங்காரன் வெளியானதிலிருந்து அப்பாடலின் ஜுரம் தொற்றிக்கொண்டது. ரஹ்மான் இப்படி ஒரு பாட்டை போட்டதே இல்லை, பாடல் வித்தியாசமாக இருக்கிறது என பலரும் புகழ்ந்தாலும், ஆமா ஆமா.. ரஹ்மான் இப்படி ஒரு பாட்டை போட்டதே இல்லைதான். மணிசர்மா அளவுக்கு இறங்கி விட்டார் என கிண்டலடித்தும் வருகின்றனர்.

  Simtaangaran lyrics meaning viral!

  ஆனால் இவற்றையெல்லாம் தாண்டி, ஏழு மில்லியனுக்கும் அதிகமான பார்வையாளர்களைப் பெற்றுள்ளது அப்பாடல்.

  பாடல் வெற்றி ஒருபுறமிருக்க, கண் இமைக்காமல் யார் ஒருவரை பார்க்க முடிகிறதோ அவர்தான் "சிம்டாங்காரன்" என பாடலாசிரியர் விவேக் விளக்கமளித்திருந்தார். ஆனால் பாடலில் உள்ள பல வார்த்தைகள் சென்னையின் ஆதி வம்சத்தினருக்கே புரியாமல் உள்ளது. இதனால் விவேக் எப்போது முழு அர்த்தத்தையும் வெளியிடுவார் என எதிர்பார்ப்போடு உள்ளனர்.

  இந்த நிலையில், பாடலின் முழு அர்த்தம் இதுதான் என, சமூக வலைதளங்களில் ஒரு விளக்கம் பரவி வருகிறது. அது உண்மையான அர்த்தம் போலத்தான் இருக்கிறது.

  " சென்னை தமிழில் எழுதப்பட்ட அந்த பாடலுக்கு விளக்க உரை:

  "பல்டி பாக்குற டர்ல

  வுடனும் பல்தே

  வோர்ல்டு

  மொத்தமும்

  அரளவுடனும் பிஸ்தே

  பிசுறு கெளப்பி

  பெர்ள வுடனும் பல்தே..."

  இந்த பல்லவியின் பொருள் யாதெனில்...

  இந்த உலகம் உன்னை பார்க்கும் பார்வையை அப்படியே தலைகீழாக மாற்றி , இந்த உலகத்தையே மிரட்டக்கூடிய பலம் பொருந்தியவனே.. என்பதுதான்.

  "ஏய்ய் நிக்கலு பிக்கலுமா

  ஓ....

  தொட்டனா தூக்கலுமா

  மக்கரு குக்கருமா

  போய் தரைல உக்காருமா..."

  அதாவது செருக்கு / பந்தா போன்றவற்றை ஊறுகாய் போன்று தொட்டுக்கொண்டாலே போதும்... அந்த செருக்கு சிறிதளவாயினும் தொட்டால் ஷாக் அடிக்கும் மின்சாரம் போல வேலை செய்யாமல் வெடித்து விடும், குக்கர் போல கடைசியில் தரையில் கொண்டு சேர்த்து விடும் என்கிறார் கவிஞர் விவேக்.

  "சிம்டான்காரன்

  எங்கனா நீ சீரன்

  நிண்டேன் பாரேன் முஷ்டு

  அப்டிகா போறேன்.."

  அதாவது கண்கள் சிமிட்டாமல் பார்த்து ரசிக்க கூடிய அழகுக்கு சொந்தக்காரனாகிய எங்கள் அண்ணன் வருவதை பார்த்து நான் வந்தேன்.. நடுவில் இந்த கோபக்கார முகம் கொண்டவனை பார்த்ததால் மீண்டும் திரும்ப செல்கிறேன் என்று பொருள்

  "சிம்டான்காரன்

  சில்பினுக்கா போறேன்

  பக்கில போடேன்

  விருந்து வைக்கபோறேன்..."

  சிமிட்டாமல் பார்த்து ரசிக்கக்கூடிய அழகுக்கு சொந்தக்காரன் இதோ வந்துவிட்டேன்.. ஆண்கள் அனைவரும் பெல்ட்டின் பக்கிலை போட்டுக்கொண்டு ஆட வாருங்கள்.. என்கிறார் தலைவன்

  தலைவி

  "மன்னவா நீ வா வா வா

  முத்தங்களை நீ தா தா தா

  பொழிந்தது நிலவோ

  மலர்ந்தது கனவோ...ஓ...ஓ..."

  ( இதுக்குலாம் அர்த்தம் கேட்கக் கூடாது)

  "கொக்கலங்கா கொக்கலங்கா

  கொக்கலங்கா குபீலு

  ஹைட்டுலிருந்து

  டைவு அடிச்சா

  டம்மாலு..."

  அதாவது

  "கொக்குகள் வந்து அமர்வதால் குபீல் என்று கலங்கி தெறிக்கும் குளத்தில் உயரத்தில் இருந்து குதித்தால் மண்டை உடையும் டமால் என்று.."

  "நம்ம புஷ்டிருக்க கோட்டையில்ல

  அல்லா ஜோரும் பேட்டைல

  சிரிசினுகுறோம் சேட்டையில குபீலு.."

  அதாவது

  "நாம் இப்போது வென்றிருக்கும் கோட்டையிலும் அதற்கு காரணமான பேட்டையிலும் அனைவரும் சிரித்துக்கொண்டிருக்கிறோம் சேட்டையில்" என்று முடிக்கிறார் கவிஞர்..

  சென்னைத்தமிழ்ல வந்தா என்ன நாங்க டீகோட் பண்ணுவோம்ல

  இப்ப பாட்ட கேளுங்க அல்லு சில்லு சிதறும். எனக் குறிப்பிட்டுள்ளனர்.

  இதுல அல்டிமேட்டாக இருப்பது. கொக்கலங்கா குபீலுக்கு அவர்கள் கொடுத்திருக்கும் விளக்கம் தான். இப்படி ஆளாளுக்கு கோனார் உரை, விளக்க உரை என்று எழுதி வைரலாக்குவதற்குள் பாடலாசிரியர் விவேக் ஒரு முடிவுக்கு வந்து உண்மையான அர்த்தத்தை வெளியிட்டால் புண்ணியமாய்ப் போகும்.

  English summary
  Simtaangaran song original meaning shared by chennaites. And it become viral now.
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  X