சூர்யாவின் சி3 படத்திற்காக இறங்கி வேலை பார்த்த விஷால் அன்ட் கோ
சென்னை: சிங்கம் 3 வெளியான தியேட்டர்களில் யாரும் படத்தை வீடியோ எடுக்காத வகையில் கண்காணிப்பு குழுக்களை அனுப்பி வைத்தாராம் நடிகர் விஷால்.
ஹரி இயக்கத்தில் சூர்யா நடித்த சிங்கம் 3 படம் பல முறை தள்ளிப் போய் நேற்று ஒருவழியாக ரிலீஸானது. தமிழகத்தில் நிலவும் அசாதாரண அரசியல் சூழலால் பலர் டிவியும் கையுமாக உள்ள நேரத்தில் படம் ரிலீஸாகியுள்ளது.

இந்நிலையில் படம் ரிலீஸான அன்றே அதை இணையத்தில் வெளியிடுவோம் என இணையதளம் ஒன்று சவால் விட்டது. ஆனால் அறிவித்தபடி அல்லாமல் ஒரு நாள் தாமதாக இன்று வெளியிட்டுவிட்டது.
இதற்கிடையே படத்தை யாரும் வீடியோ எடுக்காமல் இருக்க சிங்கம் 3 வெளியான தியேட்டர்கள் அனைத்திற்கும் கண்காணிப்பு குழுக்களை அனுப்பி வைத்தாராம் நடிகர் விஷால்.
திருச்சியில் உள்ள தியேட்டர் ஒன்றில் சிங்கம் 3 படத்தை வீடியோ எடுத்த 8 பேரை அந்த குழு கையும் களவுமாக பிடித்ததாம்.


Click it and Unblock the Notifications











