»   »  அவ்வளவு எச்சரித்தும் சிங்கம் 3 படம் இணையதளத்தில் வெளியானது!

அவ்வளவு எச்சரித்தும் சிங்கம் 3 படம் இணையதளத்தில் வெளியானது!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: சிங்கம் 3 படத்தின் தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா அவ்வளவு எச்சரித்தும் படம் இணையதளத்தில் வெளியாகியுள்ளது.

ஹரி இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள சிங்கம் 3 படம் நேற்று ரிலீஸானது. தமிழக அரசியலில் பரபரப்பான சூழல் நிலவும் நேரத்தில் படம் வெளியாகியுள்ளது.

Singam 3 leaked online

இந்நிலையில் படம் வெளியான அதே நாளில் அதை இணையத்தில் வெளியிடுவோம் என ஒரு இணையதளம் சவால் விட்டது. படத்தை இணையதளத்தில் வெளியிட்டால் சிறையில் தள்ளாமல் விட மாட்டேன் என தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா எச்சரித்திருந்தார்.

அப்படி இருந்தும் சிங்கம் 3 படம் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. ஒரு படத்தை எடுத்து ரிலீஸ் செய்ய திரைத்துறையினர் படாதபாடு படும்நேரத்தில் இப்படி இணையதளங்களில் வெளியாவதால் பலர் பாதிக்கப்படுகிறார்கள்.

இந்நிலையில் ஞானவேல்ராஜா சொன்னதை செய்வாரா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

English summary
Suriya starrer Singam 3 that hit the screens on thursday has been leaked online. Film industry is shocked by this incident.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil