»   »  எஸ் 3.. இதான் சிங்கம் 3... வரி சிக்கலில் ஹரி?

எஸ் 3.. இதான் சிங்கம் 3... வரி சிக்கலில் ஹரி?

Posted By:
Subscribe to Oneindia Tamil

சூர்யா நடிக்கும் சிங்கம் 3 படத்தின் தலைப்பை வெளியிட்டுள்ளனர். தலைப்பு எஸ் 3.

இந்தப் படத்தின் முதல் பார்வை வடிவமைப்பையும் வெளியிட்டுள்ளனர். அதில் சிங்கத்தின் முகத்துடன் சூர்யா முகத்தை கிராபிக்ஸ் செய்து வெளியிட்டுள்ளார் இயக்குநர் ஹரி. மற்றொரு போஸ்டர் சிங்கம் பின்னணியில் சூர்யா கர்ஜிப்பது போன்று அமைத்துள்ளனர்.

ஏதோ அந்தக் கால நரசிம்ம அவதார படம் பார்க்கும் உணர்வைத்தான் இந்த முதல் பார்வை படங்கள் நமக்குத் தந்தன!

Singam 3 new title S3

இன்று இப்படத்தின் படப்பிடிப்பை விசாகப்பட்டினத்தில் தொடங்கப் போகிறார்கள். தீபாவளி அல்லது கிறிஸ்துமஸ் தினத்தில் படத்தை வெளியிடத் திட்டமிட்டுள்ளது ஸ்டுடியோ கிரீன் நிறுவனம்.

படத்துக்கு முதலில் இசை அமைக்கவிருந்தவர் பீப் பாய் அனிருத். ஆனால் அவர் பெயர் கன்னாபின்னாவென கெட்டுக் கிடப்பதால், ஹிப் ஹாப் ஆதிக்கு வாய்ப்பு தந்தனர். கடைசியில் ஏனோ அவரையும் தூக்கிவிட்டு, ஹாரிஸ் ஜெயராஜை இசையமைப்பாளராக்கியுள்ளனர்.

சரி....எஸ் 3 என்பது தமிழ் தலைப்பா ஹரி? ஏற்கெனவே சூர்யாவின் முந்தைய படத்துக்கு மாஸ் என்று வைத்து, வரி விலக்குக்காக மாசிலாமணியாக்கி, பின்னர் மாசு என்கிற மாசிலாமணி என சொதப்பினார்கள். அப்படி ஏதும் இதில் செய்யமாட்டீர்களே!

English summary
Surya - Hari's third sequel of Singam has been titled as S3.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil