சிங்கம் 3... டிச 23-ல் வெளியாகுமா? - விநியோகஸ்தர்கள் எதிர்ப்பால் குழப்பம்
இதோ வருகிறது... அடுத்த வாரம் ரிலீஸ் என்று அறிவிப்புகளுடன் விளம்பரம் செய்யப்பட்டு வந்த சூர்யாவின் சிங்கம் 3, தள்ளித் தள்ளி போடப்பட்டு, கடைசியாக வரும் 23-ம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால் உண்மையில் இந்தத் தேதியில் கூட படம் வெளியாகுமா என்பது சந்தேகமாகத்தான் உள்ளதாம்.

காரணம் விநியோகஸ்தர்கள். இந்தப் படத்தை வெளியிடவிருக்கும் பல்வேறு விநியோகஸ்தர்களும் டிசம்பர் 23-ம் தேதி படத்தை வெளியிட வேண்டாம் என தயாரிப்பாளரை கேட்டுக் கொண்டுள்ளார்களாம். இப்போதுள்ள சூழலில், வெளியானால் படம் பெரும் நஷ்டத்தைச் சந்திக்கும் என்றும் அவர்கள் எச்சரித்துள்ளார்களாம்.
எனவே சிங்கம் 3 டிசம்பர் 23-ம் தேதி வெளியாவது சந்தேகம் என்பதுதான் இப்போதைய பாக்ஸ் ஆபீஸ் நிலவரம்.
ஆனால் எஸ் 3-ல் சூர்யாவின் டார்கெட்டே தெலுங்கு தேசம்தான்... அங்கேயும் தள்ளிப் போடுவார்களோ?


Click it and Unblock the Notifications











