»   »  ஓங்கி அடித்த 'சிங்கம்' இனி கார்ட்டூனிலும்... 'லிட்டில் சிங்கம்' அனிமேஷன் சீரியல்!

ஓங்கி அடித்த 'சிங்கம்' இனி கார்ட்டூனிலும்... 'லிட்டில் சிங்கம்' அனிமேஷன் சீரியல்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

மும்பை : தமிழ்த் திரையுலகில் வெளிவந்த போலீஸ் படங்களிலேயே மூன்று பாகங்களாக வந்த ஒரே படம் சூர்யா நடித்த 'சிங்கம்' தான். சிங்கம், சிங்கம் 2, எஸ் 3 என தொடர்ந்து வெளிவந்த இந்த மூன்று பாகங்களையும் இயக்கியவர் ஹரி.

இந்த மூன்று பாகங்களில் இரண்டு பாகங்கள் ரோகித் ஷெட்டி இயக்க ஹிந்தியிலும் ரீமேக் செய்யப்பட்டன. 'சென்னை எக்ஸ்பிரஸ்' படத்தை இயக்கிய ரோகித் ஷெட்டி தமிழ் ரசிகர்களுக்கும் ஏற்கெனவே அறிமுகம் தான்.

Singam animation series

ரோகித் ஷெட்டியின் ரோகித் ஷெட்டி பிக்சர்ஸ், ரிலையன்ஸ் அனிமேஷன், டிஸ்கவரி கிட்ஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தற்போது 'சிங்கம்' படத்தைத் தழுவி 'லிட்டில் சிங்கம்' என்ற அனிமேஷன் தொடர் ஒன்றை உருவாக்கியுள்ளன.

கோடை விடுமுறையில் ஏப்ரல் மாதம் முதல் இந்தத் தொடர் குழந்தைகளுக்காக டிஸ்கவரி கிட்ஸ் சேனலில் ஒளிபரப்பாக உள்ளது. 'சிங்கம்' படத்தின் புகழ் ஏற்கெனவே சிறுவர்களை சென்றடைந்த ஒன்று. இப்போது அனிமேஷன் வடிவிலும் மீண்டும் அவர்களைக் கவர உள்ளது.

ட்ரெய்லர் வெளியானதைத் தொடர்ந்து லிட்டில் சிங்கம் சீரியலைப் பார்க்க இப்போதே குழந்தைகள் ஆர்வமாகி வருகிறார்களாம். பல குழந்தைகளுக்கும் இந்த ஆண்டின் சம்மர் லீவ் 'லிட்டில் சிங்கம்' அனிமேஷன் சீரிஸோடு கழியப்போகிறது.

English summary
Surya's 'Singam' is the only cop film that came in three parts in Tamil cinema. The two parts of these three were also remade in Hindi by Rohit Shetty. Roghit Shetty Pictures have created an animated series 'Little Singham'.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil