»   »  'தொப்பிக்கே தொப்பியா...?’ படவிழாவில் குமுறிய பவர்ஸ்டார்... கொந்தளித்த சிங்கம்புலி, சிவா!

'தொப்பிக்கே தொப்பியா...?’ படவிழாவில் குமுறிய பவர்ஸ்டார்... கொந்தளித்த சிங்கம்புலி, சிவா!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை : தொப்பி பட விழாவில் தயாரிப்பாளர்கள் குறித்து பவர்ஸ்டார் பேசிய கருத்துக்களால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

தொப்பி பட ஆடியோ வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இதில், தயாரிப்பாளர் சங்கத்தைச் சேர்ந்த சிவா, தேனப்பன், இயக்குனர்கள் எஸ்.பி.முத்துராமன், சீனு ராமசாமி, நடிகர்கள் விஜய் சேதுபதி, விமல், பவர் ஸ்டார் சீனிவாசன், சிங்கம் புலி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இந்த விழாவில் பவர்ஸ்டார் சீனிவாசன் பேசியதாவது :-

தொப்பிக்கே தொப்பியா...?

தொப்பிக்கே தொப்பியா...?

தொப்பி என இந்த படத்திற்கு பெயர் வைத்துள்ளனர். எல்லோரும் தொப்பி போடுகிறார்கள். ஒரு காலத்தில் நான் எல்லோருக்கும் தொப்பி போட்டேன் (செக் மோசடி). எனக்கே இப்போது எல்லோரும் தொப்பி போடுகிறார்கள்.

எனக்கே செக்கா...

எனக்கே செக்கா...

ஒரு படத்தில் நடிப்பதற்காக முதலில் செக் கொடுக்கிறார்கள். நானே செக் கொடுத்தவன். எனக்கே செக்கா என்று கேட்டால் செக் வாங்கிக்கொள்ளுங்கள் என்று கூறுகிறார்கள்.

திருந்தி வாழ விடமாட்டார்களா...

திருந்தி வாழ விடமாட்டார்களா...

கொடைக்கானல் போன்ற உயரமான மலையில் பலமுறை நடந்து கஷ்டப்பட்டு நடித்த பின் சம்பளம் கேட்டால் எனக்கு தொப்பி போடுகிறார்கள். என்னை திருந்தி வாழ விடமாட்டார்கள் போல் தெரிகிறது. நல்லதற்கு காலம் இல்லை. எனவே இந்த படத்திற்கு தொப்பி என்பது நல்ல தலைப்பு.

சம்பளம் தர கோரிக்கை...

சம்பளம் தர கோரிக்கை...

இந்த விழாவில் தயாரிப்பாளர் சங்கத்திற்கு ஒரு கோரிக்கை வைக்கிறேன். ஏராளமான தயாரிப்பாளர்கள் தற்போது படம் எடுக்கிறார்கள். அவர்கள் படம் எடுக்க வரும்போது சுமார் 5 கோடி ரூபாயை டெபாசிட் செய்ய சொல்ல வேண்டும். அப்பொழுதுதான் படத்தில் நடித்தவர்களுக்கு பின்னர் சம்பளம் கொடுக்க முடியும்' என்றார்.

நம்பிக்கை வேண்டும்...

நம்பிக்கை வேண்டும்...

பவர்ஸ்டாரின் இந்தப் பேச்சால் விழாவில் பரபரப்பு ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து பவர்ஸ்டாரின் பேச்சிற்கு பதில் அளிக்கும் வகையில் சிங்கம்புலி பேசுகையில், ‘‘பவர் ஸ்டார் சீனிவாசன் சொல்வது சரியல்ல. தயாரிப்பாளர்கள் மீது நம்பிக்கை வைக்க வேண்டும்.

தயாரிப்பாளர்களின் கஷ்டம்...

தயாரிப்பாளர்களின் கஷ்டம்...

தற்போதைய சூழ்நிலையில் ஒரு படத்தை தயாரித்து வெளியிடுவது எவ்வளவு கஷ்டம் என்பதை புரிந்து கொள்ள வேண்டும். நாம் நடித்து முடிப்பதுடன் வேலை முடிந்தது. ஆனால், தயாரிப்பாளர்கள் அந்த படத்தை ரிலீஸ் செய்ய பெரும்பாடு படுகிறார்கள்'' எனத் தெரிவித்தார்.

பொதுமேடையில் கவனம் தேவை...

பொதுமேடையில் கவனம் தேவை...

அவரைத் தொடர்ந்து தயாரிப்பாளர் சங்கத்தைச் சேர்ந்த சிவா பேசும்போது, ‘‘ பொது மேடையில் பவர் ஸ்டார் சீனிவாசன் பேசும்போது கவனமாக பேச வேண்டும். பவர் ஸ்டார் சீனிவாசன் என்பவர் வெளியில் தெரிந்தது எவ்வாறு.

பவரின் அறிமுகம்...

பவரின் அறிமுகம்...

அவரை வெளியில் தெரிய வைத்தது ஒரு தயாரிப்பாளர்தான். தயாரிப்பாளர் இல்லை என்றால் இவர் வெளியில் தெரிந்திருக்க வாய்ப்பில்லை'' என்றார்.

பரபரப்பு...

பரபரப்பு...

விழா மேடையிலேயே நடந்த இந்த காரசார பேச்சுக்களால் தொப்பி படவிழாவில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

English summary
Singam Puli and Producer Siva attack Powerstar's controversial speech at 'Thoppi' audio launch
Please Wait while comments are loading...