Just In
- 2 hrs ago
கண்களால் வசியம் செய்யும் ஜான்வி கபூர்… மஸ்காரா போட்டு மயக்குறியே என வர்ணிக்கும் ரசிகர்கள் !
- 3 hrs ago
உச்சகட்ட கவர்ச்சியில் அட்டகாசம் செய்யும் சஞ்சிதா ஷெட்டி…விதவிதமான போஸால் திணறும் இணையதளம்!
- 4 hrs ago
பொங்கலுக்கு வெளியான தமிழ் படங்களின் ஓர் பார்வை !
- 5 hrs ago
மாஸ்டர் மகேந்திரனின் ‘நம்ம ஊருக்கு என்னதான் ஆச்சு’… டிரைலரை வெளியிடும் 2 பிரபலங்கள் !
Don't Miss!
- Automobiles
இந்தியாவில் முதல் எலக்ட்ரிக் ஸ்கூட்டரை அறிமுகப்படுத்த தீவிரம்காட்டும் சுஸுகி!! டெல்லியில் மீண்டும் சோதனை
- News
எல்லையில் அத்துமீறல் விவகாரம்... சீனாவை தொடர்ந்து கண்காணித்து வருகிறது இந்தியா..!
- Finance
7வது சம்பள கமிஷன்: அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படியை 4% உயர்த்த மோடி அரசு முடிவு..!
- Lifestyle
பேபி பொட்டேடோ மஞ்சூரியன்
- Sports
சென்னையின் எப்சி -ஈஸ்ட் பெங்கால் அணிகள் பலப்பரிட்சை... வெற்றி யாருக்கு.. காத்திருக்கும் பரபர ஆட்டம்
- Education
ரூ.62 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசு நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
'மெரினா புரட்சி'... உலகத்துல எங்க வேணும்னாலும் ரிலீஸ் செய்யலாம்... ஆனால் தமிழ்நாட்டில்?

சென்னை : மெரினா புரட்சி திரைப்படத்திற்கு சிங்கப்பூர் அரசு தணிக்கை சான்று வழங்கியுள்ள நிலையில், தமிழ்நாட்டில் மட்டும் ரிலீஸ் செய்ய முடியாத சூழல் நிலவுகிறது.
2017 ஜனவரி மாதம் ஜல்லிக்கட்டுக்கு விதிக்கப்பட்ட தடையை எதிர்த்து தமிழகம் மட்டுமின்றி உலகமெங்கும் வாழும் தமிழர்கள் தன்னெழுச்சியாக 8 நாட்கள் நடத்திய போராட்டத்தை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்ட 'மெரினா புரட்சி' திரைப்படத்திற்கு 80 நாட்களாகியும் தணிக்கை தரப்படவில்லை.

எதற்காக தணிக்கை தர மறுக்கப்படுகிறுது எனும் காரணத்தை தெரிவிக்காமல் இரண்டு முறை நிராகரிக்கப்பட்டுள்ளது. இந்த விவகாரம் குறித்து படத்தின் தயாரிப்பு நிறுவனமான நாச்சியாள் பிலிம்ஸ் சார்பில் சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
மெரினா புரட்சி திரைப்படத்தை பொங்கலுக்குள் தணிக்கை முடித்து திரையிட வேண்டும் என்று மனுதாரர் தரப்பில் கோரப்பட்டுள்ளது. இதுகுறித்து பதில் அளிக்க தணிக்கை துறைக்கு நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
இந்த சூழ்நிலையில் சிங்கப்பூர் அரசு மெரினா புரட்சி திரைப்படத்திற்கு தணிக்கை சான்று வழங்கியிருக்கிறது.சிங்கப்பூர் அரசின் தணிக்கை பிரிவான இன்ஃபோ கம்யூனிகேஷன்ஸ் மீடியா வளர்ச்சி ஆணையம் மெரினா புரட்சி திரைப்படத்திற்கு என்சி 16 என்ற பிரிவின் கீழ் " தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டு தடைக்கு எதிரான போராட்டத்தின் உண்மைகளை சொல்லும் படம் என்று குறிப்பிட்டிருக்கிறார்கள்.
இப்படத்திற்கு கனடா நாட்டிலும் ஏற்கனவே தணிக்கை சான்று வழங்கப்பட்டுள்ளது. ஆனால் தமிழ்நாட்டில் மட்டும் இப்படத்திற்கு இன்னும் தணிக்கை வழங்கப்படவில்லை. இதனால் படக்குழுவினர் மிகுந்த மனவேதனையில் இருக்கிறார்கள்.