Don't Miss!
- Lifestyle
திருமணத்திற்கு முன் நீங்க தெரிந்து கொள்ள வேண்டிய முக்கிய விஷயங்களாக சாணக்கியர் கூறுவது என்ன தெரியுமா?
- News
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் பாஜக போட்டியில்லை? அண்ணாமலை சூசசகம்
- Finance
தங்கம் விலையில் ஏற்பட்டுள்ள அழுத்தம்.. ஆபரண தங்கம் விலை குறையுமா..நிபுணர்களின் கணிப்பு?
- Travel
உலகின் 7வது பழமையான நாடு இந்தியா – முதலிடத்தில் இருப்பது இந்த நாடா?
- Technology
Jio-விற்கு செக்மேட்.. பிரபலமான 3 ப்ரீபெய்ட் திட்டங்களில் கூடுதல் நன்மையை சேர்த்த Airtel.. அதென்ன திட்டங்கள்?
- Automobiles
புதுசு கண்ணா புதுசு! டியோவின் இடத்தை காலி பண்ண வருகிறது ஹீரோவின் புதிய ஸ்கூட்டர்... பெயரே வேற லெவல்ல இருக்கு!
- Sports
"ஒரே ஒரு குறைதான்.. சரி செய்தால் நம்.1 பவுலர் ஆகலாம்".. உம்ரானுக்கு முகமது ஷமி முக்கிய அட்வைஸ்!
- Education
chennai Postal Agents Recruitment 2023:அஞ்சல் துறையில் தேர்வின்றி நேரடி நியமனம்...!
காசு கொடுத்தா ஒகேவா..அபர்ணாவை மோசமாக விமர்சித்த நெட்டிசன்ஸ்.. டென்ஷனான சின்மயி!
சென்னை : நடிகை அபர்ணா பாலமுரளியிடம் அத்துமீறி நடந்து கொண்ட மாணவனுக்கு ஆதரவாக இணையத்தில் பரவி வரும் கமெண்டுகளுக்கு பாடகி சின்மயி சரியான பதிலடி கொடுத்துள்ளார்.
கல்லூரி நிகழ்ச்சி ஒன்றில் அபர்ணா பாலமுரளி, வினீத் ஸ்ரீனிவாசன் உள்ளிட்ட தங்கம் படக்குழுவினர் கலந்துக் கொண்டனர்.
அப்போது சட்டக் கல்லூரி மாணவன் ஒருவர் நடிகை அபர்ணாவின் தோளில் கை போட்டு புகைப்படம் எடுக்க முயன்றார். மாணவரின் இந்த செயலால் அதிர்ச்சியடைந்த அபர்ணா, நைசாக விலகினார்.
ரொம்ப அருவருப்பா இருக்கு.. அபர்ணா பாலமுரளிக்கு நடந்த விஷயம்.. கொதித்தெழுந்த மஞ்சிமா மோகன்!

யாரும் தடுக்கவில்லை
கல்லூரி விழாவில் ஒரு மாணவன் அபர்ணாவின் தோளில் கை போட முயற்சித்ததை அங்கிருந்த மாணவர்கள் கைதட்டி, ஆரவாரம் செய்தனர். இதனால், அபர்ணா பாலமுரளியின் முகம் மாறியது. அந்த மாணவன் கொடுத்த பூவை கோபத்துடன் கீழே போட்டார். மேடையில் இருந்த கல்லூரி நிர்வாகிகளோ, படக்குழுவினரோ மாணவனை கண்டிக்கவும் இல்லை தடுக்கவும் இல்லை.

மன்னிப்பு கேட்ட மாணவன்
இதையடுத்து தவறை உணர்ந்த அந்த மாணவன், மீண்டும் மேடைக்கு வந்து அபர்ணாவிடம் மன்னிப்பு கேட்டு, நான் உங்களின் தீவிர ரசிகன் என்றும், உங்களைப் பார்த்த ஆர்வத்தில் இவ்வாறு நடந்து கொண்டேன் தயவு செய்து மன்னித்து விடுங்கள் என்று மீண்டும் கை கொடுக்க முயன்றார். ஆனால், அபர்ணா கை கொடுப்பதை தவிர்த்து விட்டார்.

வருத்தம் தெரிவித்த கல்லூரி
இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானதை அடுத்து, எர்ணாகுளம் சட்டக் கல்லூரி மாணவர் சங்கம், தங்களது முகநூல் பக்கத்தில் நடிகை அபர்ணா பாலமுரளியிடம் மன்னிப்புக் கேட்டு வருத்தம் தெரிவித்தது. விரும்பத்தகாத இந்த சம்பவத்திற்காக மன்னிப்பு கேட்கிறோம் என்று தெரிவித்திருந்தது. மேலும், சம்பந்தப்பட்ட மாணவர் ஒரு வாரம் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.

காசு கொடுத்த ஒகேவா
மிகவும் பேசு பொருளாக மாறிய இந்த சம்பவம் குறித்து, இணையத்தில் பலவிதமான கருத்துக்கள் பரவி வருகிறது. பல நெட்டிசன்கள் அபர்ணாவை மோசமாக விமர்சித்துள்ளனர். இந்த பதிவுகளைப் பார்த்த பாடகி சின்மயி, தோள் மேல தாண்டா கைய போட்டான், காசு கொடுத்த ஒகேவா என்றும், ஹீரோக்கள் போட்டா தப்பில்ல ரசிகன் போட்டா தப்பா என்று மோசமாக கமெண்ட் செய்து இருக்கிறார்கள்.

கேவலமான கமெண்ட்
இந்த, கமெண்டுகளை பகிர்ந்து இருக்கும் சின்மயி, சமூக வலைதளத்தில் இதுபோன்ற கேவலமான கமெண்ட்களை பார்க்கும் போது மிகவும் பயமாக இருக்கிறது. இதுபோன்ற ஆண்கள் தான் ஆண்களை நம்பி இருக்கும் பெண்களை சுற்றி இருக்கிறார்கள் என்று தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தி உள்ளார்.