For Quick Alerts
  ALLOW NOTIFICATIONS  
  For Daily Alerts

  மாதவிடாயை தீட்டு எனக்கூறி பெண்களை ஒதுக்குகிறார்கள்… சின்மயி ஆவேச பேச்சு !

  |

  சென்னை : பெண்கள் வெளியில் பேசத் தயங்கும் மாதவிடாய் பிரச்சினை குறித்து பாடகி சின்மயி ஓபனாக பேசிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

  பெண்ணின் குடும்பத்தினரே மாதவிடாயை தீட்டு என கருதி பெண்களை ஒதுக்கி வைக்கிறார்கள்.

  வராகி அம்மனுக்கு கோயில் கட்டி கும்பாபிஷேகம் நடத்திய யோகி பாபு; வைரலாகும் புகைப்படங்கள்!வராகி அம்மனுக்கு கோயில் கட்டி கும்பாபிஷேகம் நடத்திய யோகி பாபு; வைரலாகும் புகைப்படங்கள்!

  மாதவிடாய் குறித்து போதுமான விழிப்புணர்வு இல்லாததே இதற்கு காரணம் என்று கூறினார்.

  மீ டூ விவகாரம்

  மீ டூ விவகாரம்

  ஹாலிவுட்டில் தொடங்கிய மீ டூ விவகாரம் பாலிவுட், டோலிவுட்டைத் தாண்டி, கோலிவுட் வரை புயலைக் கிளப்பியது. ட்விட்டரில் ட்ரெண்டான METOO ஹேஷ்டேக் மூலம் ஏராளமான நடிகைகள் திரையுலகில் தனக்கு நேர்ந்த பாலியல் கொடுமைகளை வெளியுலகிற்கு எடுத்துரைத்தனர். அப்படி தமிழ் திரையுலகில் வெடித்த மிகப்பெரிய சம்பவம் பாடகி சின்மயி, கவிஞர் வைரமுத்து விவகாரம்.

  வைரமுத்துமீது குற்றச்சாட்டு

  வைரமுத்துமீது குற்றச்சாட்டு

  சுவிட்சர்லாந்திற்கு இசை நிகழ்ச்சிக்காக சென்ற போது வைரமுத்து தனக்காக தனி அறையில் காத்திருந்ததாக கூறி புயலைக் கிளப்பினர் சின்மயி. சினிமாவில் எனக்கு வாய்ப்பு போனாலும் பரவாயில்லை என டுவிட்டரில் பகிரங்கமாக மிரட்டல் விடுத்தார். மேலும் வைரமுத்து மீது பாலியல் புகார் கொடுத்ததைத் தொடர்ந்து, டப்பிங் யூனியனில் இருந்து நீக்கப்பட்ட சின்மயி, தொடர்ந்து வைரமுத்து குறித்து சோசியல் மீடியாவில் விமர்சித்து வருகிறார்.

  விழிப்புணர்வு தேவை

  விழிப்புணர்வு தேவை

  இந்நிலையில் பெண்களுக்கு ஏற்படும் மாதவிடாய் பிரச்சினை குறித்து பல கருத்துக்களை ஓபனாக பேசி உள்ளார். மேலும், பெண்ணின் குடும்பத்தினரே மாதவிடாயை தீட்டு என கருதுகின்றனர். மாதவிடாய் நேரத்தில் அவர்களை யாரும் தொடக்கூடாது, அவர்களுக்கு என்று தனி தட்டு,தனி இடம் கொடுத்து தள்ளிவைத்து பல கட்டுப்பாடுகளை விதிக்கின்றனர் என்றார். இதுவும் ஒருவகையான தீண்டாமை தான், இது பல ஆண்டு காலமாக இருந்து வருகிறது. எத்தனையோ விஷயங்களில் நாம் மாறினாலும் மாதவிடாய் விஷயத்தில் மாறவே இல்லை. அதை ஒரு காரணமாக கூறி பெண்களை ஒதுக்கும் அவலம் இன்னும் உள்ளது. இதற்கு காரணம் மாதவிடாய் குறித்த போதிய விழிப்புணர்வு இல்லாததே ஆகும்.

  தனி தட்டு, தனி இடம்

  தனி தட்டு, தனி இடம்

  மாதவிடாய் பற்றி போதிய விழிப்புணர்வு அனைவருக்கும் தேவை என்று படபடப்பாக பேசினார். மாதவிடாய் நேரத்தில் பெண்களை தள்ளிவைப்பதில் சைன்ஸ்னு சொல்லுவாங்க, அப்படி எந்த சைன்ஸ் ரீசனும் இல்லை. அப்படி சொன்னா அது சுத்தப்பொய், எந்த மண்ணாங்கட்டியும் இல்ல இத நல்ல புரிஞ்சிக்கோங்க. மாதவிடாயால் எந்த பரிசுத்தமான விஷயமும் மாறிவிடாது இது புரிஞ்சிக்கிட்டு பேசுங்க என்றார்.

  கேவலமான பெண்ணா?

  அதேபோல முதலிரவின்போது சில அறிகுறிகள் தென்படாவிட்டால் இந்த பெண் வெர்ஜின் இல்லை என்றும், அந்த பெண்ணை கேவலமான பெண்ணாக நினைக்கும் மனநிலை உள்ளது. அந்த கட்டுக்கதைகள் இன்றும் நம்பப்பட்டு வருகிறது. ஒரு பெண் கன்னித்தன்மையுடன் இருக்கிறார் என்பதற்கு இதை உதாரணமாக எப்படி எடுத்துக் கொள்ள முடியும். நான் ஒன்றே ஒன்றை கேட்கிறேன், மொத்தத்தில் நம்மை தள்ளி வைப்பதற்கு இவர்கள் யார் என அவர் ஆவேசமாக பேசி வெளியிட்டுள்ள வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. இதற்கு பலரும் அவரை பாராட்டியும் வருகின்றனர். ஒரு சிலர் சின்மயி திடீரென ஏன் இப்படி பேசுகிறார், அவர் காரணம் இல்லாமல் ஒரு பிரச்சினை குறித்து பேசமாட்டார் என்றும் கேட்டு வருகின்றனர்.

  English summary
  Singer Chinmayi Sripada angry speech about periods viral on social media
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  X