twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    5 பேர் கும்பல் என்னை டிவிட்டர், பேஸ்புக்கில் அசிங்கப்படுத்தி வருகிறது- சின்மயி பரபரப்பு புகார்

    By Sudha
    |

    சென்னை: என்னைப் பற்றி ஐந்து பேர் கொண்ட ஒரு குழு அவதூறாகவும், கீழ்த்தரமாகவும் டிவிட்டர், பேஸ்புக் மூலம் பிரசாரம் செய்து வருகிறது. மேலும் என்னை ஒரு குறிப்பிட்ட கட்சியில் சேருமாறும் அவர்கள் மிரட்டி வருகின்றனர். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பிரபல பாடகி சின்மயி சென்னை போலீஸில் புகார் கொடுத்துள்ளார்.

    நான் ஒரு சமூக சேவகி

    நான் ஒரு சமூக சேவகி

    இதுதொடர்பாக தனது தாயாருடன் சென்னை போலீஸ் கமிஷனர் ஜார்ஜை சந்தித்து அவர் தனது புகாரைக் கொடுத்தார். அதில் பிரபல பாடகியாகவும், பெண்கள் மற்றும் குழந்தைகள் நலனுக்காக பாடுபட்டுவரும் சமூக சேவகியுமாக நான் உள்ளேன்.

    பேஸ்புக் மூலம் அசிங்கப்படுத்துகிறார்கள்

    பேஸ்புக் மூலம் அசிங்கப்படுத்துகிறார்கள்

    என்னைப் பற்றி ஐந்து பேர் கொண்ட ஒரு குழு டிவிட்டர், பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைத்தளங்கள் மூலம் அவதூறாகவும், கீழ்த்தரமாகவும், அசிங்கமாகவும் பிரசாரம் செய்து வருகிறது.

    கட்சியில் சேரச் சொல்கிறார்கள்

    கட்சியில் சேரச் சொல்கிறார்கள்

    மேலும் என்னை ஒரு குறிப்பிட்ட அரசியல் கட்சியில் சேருமாறும் அவர்கள் நிர்ப்பந்தப்படுத்தியும், மிரட்டியும் வருகின்றனர். எனது பணிகளுக்குக் குந்தகம் விளைவிக்கும் வகையில் செயல்பட்டு வருகிறார்கள்.

    ஐந்து பேரையும் பிடித்து ஆக்ஷன் எடுங்கள்

    ஐந்து பேரையும் பிடித்து ஆக்ஷன் எடுங்கள்

    எனது பெயரைக் கெடுக்கும் வகையில் இந்த அவதூறுப் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வரும் இந்த ஐந்து பேர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சின்மயி கோரியுள்ளார்.

    யார் இந்த சின்மயி?

    யார் இந்த சின்மயி?

    ஏகப்பட்ட படங்களில் பாடி பிரபலமானவர் சின்மயி. எந்திரன் படத்தில் வந்த கிளிமாஞ்சாரோ பாடலைப் பாடியவர். மேலும் கன்னத்தில் முத்தமிட்டால் படத்தில் வந்த ஒரு தெய்வம் தந்த பூவே பாடலுக்காக தேசிய விருதும் பெற்றவர். பல பிரபல ஹீரோயின்களுக்கு குரல் கொடுத்து வருகிறார் சின்மயி என்பது குறிப்பிடத்தக்கது.

    மொத்தம் 2 புகார்கள்

    மொத்தம் 2 புகார்கள்

    சின்மயி போலீஸில் 2 புகார்களைக் கொடுத்துள்ளார். முதல் புகாரில், வெளிநாடுகளில் இசை நிகழ்ச்சிகள் நடத்தும் கஜேந்திரகுமார் என்பவர் எனக்கு ரூ.12 லட்சம் பணம் தரவேண்டும். பலமுறை கேட்டும் அவர் பணம் தராமல் காலம் கடத்திக்கொண்டு வருகிறார். எனவே ரூ.12 லட்சம் பணத்தை பெற்றுத்தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

    2வது புகார் சொல்வது என்ன?

    2வது புகார் சொல்வது என்ன?

    டுவிட்டர் இணையதளத்தில் என்னை ஆபாசமாக சித்தரித்து புகைப்படங்களும், அருவருக்கத்தக்க வாசகங்களும் இடம் பெற்றுள்ளன. 6 பேர் சேர்ந்து இந்த அருவருக்கத்தக்க செயலில் ஈடுபட்டுள்ளனர். உதவி பேராசிரியர் ஒருவருக்கும் இதில் தொடர்பு உள்ளது. அவர்கள் மீது போலீசார் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    கேவலமான நிலை

    கேவலமான நிலை

    செய்தியாளர்களிடம் சின்மயி பேசுகையில்,டுவிட்டர் இணையதளத்தில் அரசியல் பிரபலங்களையும், என்னைப்போல் சினிமா உலகில் இருப்பவர்களையும் மிகவும் கேவலமாக சித்தரிக்கும் நிலை ஏற்பட்டுளளது. பிரதமர் உள்பட அனைவரையும் தவறாக இணைய தளத்தில் சிலர் சித்தரித்து வருகிறார்கள். நான் ஒவ்வொருமுறையும் புகழின் உச்சியில் இருக்கும் போதெல்லாம் மிகவும் கேவலமாக விமர்சிப்பதை வழக்கமாக கொண்டுள்ளது. அவர்கள் யார் என்ற விவரங்களையும், 6 பேர் பெயர்களையும் குறிப்பிட்டு கமிஷனரிடம் புகார் கொடுத்துள்ளேன்.

    பெயரைக் கெடுக்கிறார்கள் .. தாயார் குமுறல்

    பெயரைக் கெடுக்கிறார்கள் .. தாயார் குமுறல்

    சின்மயியின் தாய் பத்மாசினி கூறும்போது, சின்மயி பொதுமக்கள் மற்றும் ரசிகர்கள் ஆதரவால் வளர்ச்சி அடைந்து உள்ளார். அவரது பெயரை கெடுக்கும் நோக்கத்துடன் செயல்படுபவர்களை போலீசார் கண்டுபிடித்து தண்டிக்க வேண்டும் என்றார்.

    சின்மயி டிவிட்டர் பக்கம்

    English summary
    Famous cinema singer Chinmayi has complained of harassment by 5 member group through Facebook and twitter.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X