»   »  'மாரி' வழியில் 'எஸ்3'!

'மாரி' வழியில் 'எஸ்3'!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: ஹரியின் இயக்கத்தில் சூர்யா நடிக்கும் எஸ் 3 படத்தில் பாடகரான கிரிஷ் போலீஸ் வேடத்தில் நடிக்கிறார்.

சிங்கம், சிங்கம் 2 படங்களைத் தொடர்ந்து ஹரியின் இயக்கத்தில் சூர்யா நடிக்கும் சிங்கம் 3 படத்திற்கு எஸ் 3 என்று பெயரிட்டுள்ளனர்.

சர்வதேசப் போலீசாக சூர்யா நடிக்கும் இந்தப் படத்தின் முதற்கட்டப் படப்பிடிப்பானது விசாகப்பட்டினத்தில் தொடங்கி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

Singer Krish Joins Surya's S3

முதல் 2 பாகத்தில் நடித்த விவேக் மற்றும் சந்தானம் ஆகியோர் இந்தப் படத்தில் நடிக்கவில்லை. இவர்களுக்குப் பதிலாக சூரி, சாம்ஸ், ரோபோ சங்கர் என்று 3 காமெடி நடிகர்கள் எஸ் 3யில் நடிக்கின்றனர்.

சூர்யா சர்வதேசப் போலீசாகவும், சுருதிஹாசன் சிஐடி ஆபிசராகவும் நடிக்கும் இப்படத்தில் பாடகர் கிரிஷும் போலீஸ் அதிகாரியாக நடித்து வருகிறார்.

ஏற்கனவே தனுஷின் மாரி படத்தில் பாடகர் விஜய் யேசுதாஸ் போலீஸ் அதிகாரியாக நடித்திருந்தார். படம் பெரிதாக போகாவிட்டாலும் விஜய் யேசுதாஸின் நடிப்பு பலராலும் பாராட்டப்பட்டது.

தற்போது விஜய் யேசுதாசைப் பின்பற்றி பாடகர் கிரிஷும் எஸ் 3 யில் போலீஸ் அதிகாரி வேடத்தில் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.

ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைப்பில் உருவாகி வரும் எஸ் 3 யின் படப்பிடிப்பை பல்வேறு ஆசியக் கண்டங்களிலும் நடத்த எஸ் 3 குழுவினர் திட்டமிட்டு உள்ளனர்.

English summary
The Third Sequel of the Singam Franchise S3, Singer Krish Acting that a Police Officer in this Film.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil