twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    மெலடி குயின் லதா மங்கேஷ்கர்...வாழ்க்கை பயண நினைவுகள்

    |

    மும்பை : மெலடி குயின் என அனைவராலும் போற்றப்படும் லதா மங்கேஷ்கர் கொரோனா தொற்றால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற வந்த நிலையில் இன்று காலை உயிரிழந்தார். அவரின் வாழ்க்கை பயணம் பற்றிய சில நினைவுகளை இங்கே பார்க்கலாம்.

    Recommended Video

    பாடகி லதா மங்கேஷ்கர் காலமானார் | Latha Mangeshkar Biography

    1929 ம் ஆண்டு செப்டம்பர் 28ம் தேதி இந்தூரில் பிறந்தவர் லதா மங்கேஷ்கர். மராத்தி மற்றும் கொங்கனி இசைக்கலைஞரான தீனாநாத்தின் மகள் தான் லதா மங்கேஷ்கர். பிறந்த போது இவருக்கு ஹேமா என்று தான் இவரது பெற்றோர் பெயரிட்டனர். ஆனால் பிறகு இவரது தந்தை நடித்த நாடகங்களில் ஒன்றான பாவ்பந்தனில் வரும் லதிகா என்ற கேரக்டரின் நினைவாக மகளின் பெயரை லதா என மாற்றினார்.

    இர்பான் அகமத்திற்காக பாடிய அப்துல் காலிக்... எஃப்ஐஆர் படத்தின் வேற லெவல் அப்டேட் இர்பான் அகமத்திற்காக பாடிய அப்துல் காலிக்... எஃப்ஐஆர் படத்தின் வேற லெவல் அப்டேட்

    ஆரம்ப கால வாழ்க்கை

    ஆரம்ப கால வாழ்க்கை

    மூன்று சகோதரிகள் மற்றும் ஒரு சகோதரனுடன் பிறந்தவர் லதா மங்கேஷ்கர். இவருடன் பிறந்தவர்களும் பாடகர்கள் மற்றும் இசை கலைஞர்கள் தான். லதா மங்கேஷ்கருக்கு முதன் முதலில் இசைப்பாடகம் கற்றுக் கொடுத்தவர் அவரின் தந்தை தான். ஐந்து வயதாக இருக்கும் போது தனது தந்தையின் இசைக்குழுவில் சேர்ந்து நடிக்க துவங்கினார் லதா. 1943 ஆம் ஆண்டு லதாவிற்கு 13 வயதான போது அவரின் தந்தை இதய நோயால் உயிரிழந்தார். அப்போது அவர்கள் குடும்பத்திற்கு உதவுவதற்காக மாஸ்டர் விநாயக் என்பவர் லதா மங்கேஷ்கருக்கு சினிமாவில் பாடும் வாய்ப்பை பெற்று வந்தார்.

    திரையுலக பயணம்

    திரையுலக பயணம்

    பாடகியாகவும், நடிகையாகவும் தனது திரையுலக வாழ்க்கையை துவக்கினார் லதா மங்கேஷ்கர். லதா மங்கேஷ்கர் முதல் முதலில் பாடிய சினிமா பாடல் மராத்தி மொழியில் தான். ஆனால் அந்த பாடல் கடைசி நிமிடத்தில் படத்தில் இருந்து நீக்கப்பட்டது. பிறகு 1943ல் மராத்தி படமான Gajaabhaau படத்திற்காக மாதா ஏக் சபூத் என்ற இந்தி பாடல் தான் லதா மங்கேஷ்கர் பாடி வெளிவந்த முதல் பாடல். பிறகு மும்பையில் செட்டில் ஆன லதா, இந்துஸ்தானி இசையையும் பயின்றார். பின்னணி பாடகி, தயாரிப்பாளர் போன்ற பல முகங்களைக் கொண்ட லதா மங்கேஷ்கர் சில படங்களுக்கு இசையமைத்தும் இருக்கிறார்.

    மற்ற பாடகர்களுடன் பாடல்

    மற்ற பாடகர்களுடன் பாடல்

    ஆஷா போஸ்லே, உஷா மங்கேஷ்கர், பி.பி.ஸ்ரீநிவாஸ், எஸ்.பிபி, பகஜ் உதாஸ், அபிஜித் பட்டாச்சாரியா, உதித் நாராயண், முகமத் ஆசிஸ் உள்ளிட்ட இந்தியாவின் புகழ்பெற்ற பல பாடகர்களுடன் இணைந்து லதா மங்கேஷ்கர் பாடி உள்ளார். இளையராஜா, ஏ.ஆர்.ரஹ்மான் உள்ளிட்ட இசையமைப்பாளர்களுடனும் இவர் இணைந்து பணியாற்றி உள்ளார். ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் இவர் பாடிய வந்தே மாதரம் பாடலை கேட்டு மெய் சிலிர்த்து போகாதவர்களே இருக்க முடியாது.

    சாதனைகள்

    சாதனைகள்

    லதா மங்கேஷ்கர் கிட்டதட்ட 36 க்கும் அதிகமான இந்திய மொழிகளிலும், சில வெளிநாட்டு மொழிகளிலும் பாடி உள்ளார். இந்தி மற்றும் மராத்தியிலேயே இவர் அதிக பாடல்கள் பாடி உள்ளார். தனது வாழ்நாளில் 30,000 க்கும் அதிகமான பாடல்களை லதா மங்கேஷ்கர் பாடி உள்ளார். சுமார் 25,000 பாடல்களை சோலோவாக பாடி உள்ளார். அதிகமான மொழிகளில் அதிகமான பாடல்களை பாடிய ஒரே பாடகி என்ற பெருமை லதா மங்கேஷ்கரையே சேரும்.

    இசையமைப்பாளர்

    இசையமைப்பாளர்

    மராத்தி மற்றும் இந்தி மொழிகளில் 5 படங்களுக்கு லதா மங்கேஷ்கர் இசையமைத்துள்ளார். Sadhi Manase படத்திற்காக மகாராஷ்டிர மாநில அரசின் சிறந்த இசையமைப்பாளர் விருதினை 1965 ம் ஆண்டே வென்றவர். இவர் இசையமைத்த Airanichya deva tula என்ற பாடல் சிறந்த பாடலுக்கான விருதினையும் பெற்றுள்ளது. 1960 முதல் 1969 வரை இவர் படங்களில் இசையமைப்பாளராக இருந்தார்.

    தயாரிப்பாளர்

    தயாரிப்பாளர்

    லதா மங்கேஷ்கர் 4 படங்களை தயாரித்துள்ளார். vaadal, jhaanjhar, kanchan ganga, lekin ஆகிய படங்களை இவர் தயாரித்துள்ளார். இதில் Vaadal தவிர மற்ற மூன்றும் இந்தி படங்கள் ஆகும்.

    விருதுகள்

    விருதுகள்

    விருதுகள் இந்தியாவின் நைட்டிங் கேள் என அழைக்கப்படும் லதா மங்கேஷ்கர், பத்ம பூஷன், பத்ம விபூஷன், தாதா சாகிப் பால்கே, ஏராளமான தேசிய விருதுகள் உள்ளிட்ட பல விருதுகளை இவர் பெற்றுள்ளார். இந்தியாவின் மிக உயரிய விருதான பாரத ரத்னா விருதினையும் இவர் பெற்றுள்ளார். அவர் விரைவில் குணமடைய திரை பிரபலங்கள், ரசிகர்கள் உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

    English summary
    Veteran singer Lata Mangeshkar passed away at the age of 92. She was admitted to the hospital after testing COVID-19 positive. She sang more than 30,000 songs in various Indian languages and a few other foreign languages. Here we list her life journey.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X