Don't Miss!
- News
சேகர் ரெட்டிக்கு ரூ. 7 கோடி? ஐ.டி உத்தரவை ரத்து செய்யக் கோரிய அதிமுக ‘மாஜி’.. ’அதே’ நாளில் விசாரணை!
- Lifestyle
கருட புராணத்தின் படி இந்த 5 விஷயங்களை செஞ்சா, மரணத்திற்கு பின் நரகம் செல்வதை தவிர்க்கலாம்..!
- Automobiles
இந்த கதை தெரியுமா? சஃபாரி பெயருக்காக டாடாவிடம் கையேந்தி நின்ற பிரபல வெளிநாட்டு கார் நிறுவனம்!!
- Sports
"கேப்டன் குற்றச்சாட்டு; துணைக்கேப்டன் பாராட்டு" நியூசி,தொடரில் ஏற்பட்ட சர்ச்சை..குழம்பும் ரசிகர்கள்
- Technology
தரமான 5G ஸ்மார்ட்போனை இந்தியாவுக்கு கொண்டுவரும் விவோ.! என்னென்ன அம்சங்கள்?
- Finance
பொறுப்புக்கு வந்த வாரிசுகள்.. குமார் மங்கலம் பிர்லா நிம்மதி..!
- Travel
தாம்பரத்தில் தாஜ்மஹாலா – ஆம்! ஒரு அற்புதமான கண்காட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது – மிஸ் பண்ணிடாதீங்க!
- Education
GRSE Recruitment Notification 2023:கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1.8 லட்சத்தில் வேலை...!
பெரும் சோகம்.. மறைந்தார் பின்னணி பாடகரும், நடிகருமான "கணீர் குரலோன்" மாணிக்க விநாயகம்!
சென்னை : பிரபல சினிமா பின்னணி பாடகரும், நடிகருமான மாணிக்க விநாயகம் இன்று உடல்நலக்குறைவால் காலமானார். அவருக்கு வயது 78. இவரின் திடீர் மறைவு சினிமா உலகை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.
2001 ம் ஆண்டு விக்ரம் நடித்த தில் படத்தில் கண்ணுக்குள்ள கெளுத்தி பாடலை பாடி தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் மாணிக்க விநாயகம். தனது கனீர் குரலால் தவசி, கண்ணத்தில் முத்தமிட்டால், ரன், ஜெயம், இயற்கை, தூள், திருப்பாச்சி, சிங்கம், வெயில் உள்ளிட்ட பல படங்களில் ஏராளமான ஹிட் பாடல்களை பாடி உள்ளார்.

2003 ம் ஆண்டு தனுஷ் நடித்த திருடா திருடி படத்தின் மூலம் நடிகராகவும் அறிமுகமானார். பல படங்களில் கேரக்டர் ரோல்களில் நடித்து, ரசிகர்களை கவர்தவர் மாணிக்க விநாயகம். பேரழகன், கிரி, திமிரு, சந்தோஷ் சுப்ரமணியம், தோழி, வேட்டைக்காரன், பலே பாண்டியா, யுத்தம் செய் உள்ளிட்ட படங்களில் நடித்தார். கடைசியாக 2017 ல் எண்பத்தி எட்டு படத்தில் நடித்தார் மாணிக்க விநாயகம்.
மாணிக்க விநாயகம் இதுவரை பல்வேறு தென்னிந்திய மொழிகளில் கிட்டதட்ட 800 பாடல்களை பாடி உள்ளார். இது தவிர பக்தி பாடல்கள், கிராமியப்பாடல்கள் என 15,000 க்கும் அதிகமான பாடல்களை மாணிக்க விநாயகம் பாடி உள்ளார்.
தொடர்ந்து
5
சீசன்கள்...கமல்
பிக்பாசை
தொகுத்து
வழங்க
இது
தான்
காரணமா
?
மாணிக்க விநாயத்தின் தந்தை வழுவூர் பி.ராமைய்யா பிள்ளையும் ஒரு நாட்டிய கலைஞர். மாணிக்க விநாயகத்தின் மாமாவும், இசை குழுவுமான சி.எஸ்.ஜெயராமனும் பிரபலமான ஒரு பாடகர்.
சென்னையில் வசித்து வந்த மாணிக்க விநாயகத்தின் மறைவிற்கு திரையுலகினர், ரசிகர்கள், பிரபலங்கள் உள்ளிட்ட பலரும் சோஷியல் மீடியாவில் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.