எக்கச்சக்க பணம், மதுபாட்டில்கள்: மும்பை ஏர்போர்ட்டில் பிரபல பாடகர் கைது

By Siva

Mika Singh
மும்பை: அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிகமாக பணம் வைத்திருந்த இந்தி பாடகர் மிகா சிங் மும்பை விமான நிலையத்தில் சுங்கத்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார்.

இந்தி பாடகர் மிகா சிங் பாங்காக்கில் நடந்த கலை நிகழ்ச்சியில் கலந்து கொண்டுவிட்டு தனியார் விமானம் மூலம் நேற்று இரவு மும்பையில் உள்ள சத்ரபதி சிவாஜி சர்வதேச விமான நிலையத்தில் வந்திறங்கினார். அப்போது அவரை சுங்கத் துறை அதிகாரிகள் சோதனை செய்தபோது அவரிடம் 3 லட்சம் ரூபாயும் மற்றும் 12,000 அமெரிக்க டாலர்களும்(ரூ.6.36 லட்சம்) இருந்தன. மேலும் ஏகப்பட்ட மதுபான பாட்டில்களும் வைத்திருந்தார். அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிக ரொக்கம் வைத்திருந்ததால் அவரை அதிகாரிகள் கைது செய்து விசாரித்தனர். பின்னர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.

ஒரு பயணி 3,000 டாலர் ரொக்கம் மற்றும் 7,000 டாலருக்கான டிராவலர்ஸ் செக் மட்டுமே எடுத்துச் செல்ல முடியும். மேலும் ரூ. 7,500 ரொக்கம் எடுத்துச் செல்ல அனுமதி உண்டு என்பது குறிப்பிடத்தக்கது.

முதலில் அவரிடம் மதுபாட்டில்கள் குறித்து தான் விசாரிக்கப்பட்டது. அப்போது அவரிடம் எவ்வளவு ரொக்கம் இருக்கிறது என்று கேட்டதற்கு ரூ.1 லட்சமும், 5,000 டாலரும் உள்ளது என்று தெரிவித்துள்ளார். அவர் மீது சந்தேகப்பட்டு சோதனை செய்ததில் தான் மொத்த பணமும் சிக்கியது.

கடந்த 2006ம் ஆண்டு பாலிவுட் நடிகை ராக்கி சாவந்தின் பிறந்தநாள் அன்று அவருக்கு லிப் டூ லிப் முத்தம் கொடுத்து பெரும் சர்ச்சையைக் கிளப்பியவர் மிகா சிங்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X