»   »  பி.சுசீலா இசையமைப்பாளர் அவதாரம் எடுக்கும் படம் எது தெரியுமா?

பி.சுசீலா இசையமைப்பாளர் அவதாரம் எடுக்கும் படம் எது தெரியுமா?

Posted By:
Subscribe to Oneindia Tamil
ஜூலி படத்திற்கு இசையமைக்கிறார் பி.சுசீலா!

சென்னை : பாடகி பி.சுசீலா 60 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட பல மொழிகளில் பாடல்களைப் பாடி வருகிறார். 40 ஆயிரம் பாடல்களுக்கு மேல் பாடி பல தேசிய விருதுகளையும் வென்றிருக்கிறார். அதிகமான பாடல்களைப் பாடியவர் கின்னஸ் சாதனையும் படைத்திருக்கிறார்.

இந்நிலையில், ஒரு திரைப்படத்திற்கு இசையமைப்பாளராக அவதாரம் எடுக்க இருக்கிறார் பி.சுசீலா. பாடல்கள் பாடுவதில் மட்டும் கவனம் செலுத்தி வந்த பி.சுசீலா, படக்குழுவினரின் வற்புறுத்தலின் பேரில் இந்தப் படத்திற்கு இசையமைக்க ஒப்புக்கொண்டுள்ளார்.

Singer P.susheela becomes music director

அது வேறு எந்தப் படமும் அல்ல. பிக்பாஸ் ஜூலி நாயகியாக நடிக்கும் 'டாக்டர்.எஸ்.அனிதா எம்.பி.பி.எஸ்' படம் தான். இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் அனிதா பிறந்தநாள் அன்று வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

நீட் தேர்வுக்கு எதிராக போராடி உயிர் நீத்த அனிதாவின் வாழ்க்கையை மையமாக வைத்து இந்தப் படம் உருவாகிறது. எஸ்.அஜய் என்பவர் இப்படத்தை இயக்குகிறார். படத்தின் கதையால் நெகிழ்ந்த பி.சுசீலா இந்தப் படத்திற்கு இசையமைக்க ஓகே சொல்லி இருக்கிறார்.

English summary
P.Susheela has been singing songs in Tamil, Malayalam, Telugu and Kannada for over 60 years. In this scenario, P.Susheela is going to be a music composer with the film 'Dr.S.Anitha MBBS' which will be lead by Biggboss Julie.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil

X