»   »  'முன்பே வா என் அன்பே வா' அம்மாவாகப் போகிறார் பாடகி ஸ்ரேயா கோஷல்

'முன்பே வா என் அன்பே வா' அம்மாவாகப் போகிறார் பாடகி ஸ்ரேயா கோஷல்

Posted By:
Subscribe to Oneindia Tamil

மும்பை: பாடகி ஸ்ரேயா கோஷல் விரைவில் அம்மாவாகப் போகிறார் என பாலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இந்தியாவின் முன்னணிப் பாடகிகளில் ஒருவரான ஸ்ரேயா கோஷல், தன்னுடைய மயக்கும் குரலால் கோடிக்கணக்கான இதயங்களை வசீகரித்தவர்.

Singer Shreya Ghoshal Is Pregnant

ஆல்பம் படத்தில் இடம்பெற்ற 'செல்லமே செல்லம்' பாடலின் மூலம் தமிழில் அறிமுகமான ஸ்ரேயா, தமிழில் 100 க்கும் அதிகமான பாடல்களை இதுவரை பாடியிருக்கிறார்.

கடைசியாக இவர் பாடி வெளியான 'மிருதா மிருதா' உட்பட ஸ்ரேயா கோஷலின் குரலில் வெளியான அனைத்துப் பாடல்களுமே தமிழில் ஹிட்டடித்துள்ளன.

கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் தன்னுடைய நீண்டநாள் நண்பர் ஷிலாதித்யாவை, ஸ்ரேயா திருமணம் செய்துகொண்டார்.

இந்நிலையில் ஸ்ரேயா கோஷல் விரைவில் அம்மாவாகப் போவதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

சமீபகாலமாக சினிமா தொடர்பான நிகழ்ச்சிகள் எதிலும் ஸ்ரேயா கோஷல் கலந்து கொள்வதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
Sources Said Popular Playback Singer Shreya Ghoshal Expecting her First Child.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil