பயில்வான் ரங்கநாதனுக்கு பின்னணியில் தனுஷ் உள்ளாரா? சுசித்ரா கொடுத்த புகாரில் இப்படி இருக்கே?
சென்னை: தன் மீது ஏகப்பட்ட அவதூறுகளை தொடர்ந்து யூடியூப் வீடியோக்களில் பேசி களங்கப்படுத்தி வருகிறார் பயில்வான் ரங்கநாதன் என பாடகி சுசித்ரா பரரபரப்பு புகார் அளித்துள்ளார்.
பயில்வான் ரங்கநாதன் தனது யூடியூப் சேனலில் பல்வேறு நடிகைகள் பற்றி பல அவதூறு கருத்துக்களை பேசியே சம்பாதித்து வருகிறார் என அவர் மீது ஏகப்பட்ட நடிகைகள் சண்டைக்கு சென்றுள்ளனர்.
ஆனால், இதுவரை யாருமே அவர் மீது ஏன் புகார் அளிக்கவில்லை என்கிற கேள்வியை சமீபத்தில் அவரே எழுப்பி இருந்த நிலையில், தற்போது முதல் முறையாக பாடகி சுசித்ரா பயில்வான் ரங்கநாதன் மீது கமிஷ்னர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளது பரபரப்பை கிளப்பி உள்ளது.

நடிகைகளை பற்றி அவதூறு
தமிழ் சினிமாவின் பல முன்னணி நடிகைகள் சினிமா வாய்ப்புக்காக படுக்கையை பகிர்ந்து தான் வாய்ப்புகளை பெற்றனர் என பச்சையாகவே தனது யூடியூப் சேனலில் பேசி பிரபலமாகி வருகிறார் நடிகரும், பத்திரிகையாளருமான பயில்வான் ரங்கநாதன். நடிகை ஓவியா, ஆல்யா மானசா உள்ளிட்ட சிலர் அவருக்கு எதிராக கொந்தளித்துள்ளனர்.

சுசித்ரா புகார்
இந்நிலையில், சமீபத்தில் பாடகி சுசித்ரா பற்றியும் அவதூறு கருத்துக்களை முன் வைத்து பயில்வான் ரங்கநாதன் பேசியிருந்தது பெரும் சர்ச்சையை கிளப்பியது. பயில்வான் ரங்கநாதன் உடன் இதன் காரணமாக வாக்குவாதத்தில் ஈடுபட்ட பாடகி சுசித்ரா தற்போது அவர் மீது கமிஷ்னர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.
Recommended Video

வாய்ப்புக்காக படுக்கைக்கு போனேன்னு
கடந்த மார்ச் மாதம் அவரது யூடியூப் சேனலில் பாடகி சுசித்ரா போதைக்கு அடிமையானவர் என்றும், திரைப்படங்களில் பாடுவதற்கான வாய்ப்புகளை பெற சில பிரபலங்களுடன் படுக்கையையே பகிர்ந்தேன் என்றும் அவர் அந்த வீடியோவில் பேசியுள்ளார் என்று குறிப்பிட்டுள்ளார். கடந்த 2017ம் ஆண்டு முதலே இப்படி பல முறை தன்னை இழிவுப்படுத்தி அவர் பேசியதால் பல துன்பங்களை சந்தித்தேன் என்றும் கூறியுள்ளார்.

ஒரு ரூபாய்க் கூட இல்லை
பயில்வான் ரங்கநாதன் தன் மீது அபாண்டமான அவதூறுகளை சமூக வலைதளங்களில் பரப்பியதன் மூலம் எனக்கு எந்த ஒரு வேலையும் கிடைக்காமல் போனது. கடந்த 2017ம் ஆண்டு முதல் புதிய வாய்ப்புகள் ஏதும் கிடைக்காமல் என் கணக்கில் ஒரு ரூபாய்க் கூட இல்லாமல் போனது. 2017 முதல் ஐடி கட்ட வேண்டிய நிலை கூட எனக்கு ஏற்படவில்லை எனக் புலம்பித் தள்ளி இருக்கிறார்.

சுச்சி லீக்ஸ் பிரச்சனை
தனது சமூக வலைதளம் ஹேக் செய்யப்பட்டு அதில் இருந்து வெளியான ஆபாச வீடியோக்களால் தனக்கு மிகப்பெரிய பிரச்சனை ஏற்பட்டது. அதுகுறித்த புகாரையும் அப்போதே சைபர் கிரைம் போலீசாரிடம் அளித்துள்ளேன். நடிகர் தனுஷ், இயக்குநர் வெங்கட் பிரபு, மற்றும் சுசித்ராவின் முன்னாள் கணவர் கார்த்திக் குமார் மீது தான் சந்தேகம் உள்ளதாக தெரிவித்து இருந்தேன். தற்போதும், அவர்களின் தூண்டுதலில் தான் பயில்வான் ரங்கநாதன் இப்படி செயல்படுகிறாரோ என்கிற சந்தேகம் உள்ளது. சம்பந்தப்பட்டவர்களை அழைத்து விசாரிக்க வேண்டும் என கோரிக்கை வைக்கிறேன் என தனது புகார் மனுவில் பாடகி சுசித்ரா கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications











