»   »  மீண்டும் ஒரு வீடியோவை வெளியிட்டார் சுசிலீக்ஸ் புகழ் சுசித்ரா

மீண்டும் ஒரு வீடியோவை வெளியிட்டார் சுசிலீக்ஸ் புகழ் சுசித்ரா

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: ட்விட்டரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய பாடகி சுசித்ரா தற்போது புதிய வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

பாடகி சுசித்ராவை யாரும் அவ்வளவு எளிதில் மறந்துவிட முடியாது. தனுஷுடன் ஏற்பட்ட மோதலை அடுத்து ட்விட்டரில் புகைப்படம் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார் சுசி.

மேலும் சில பிரபலங்களின் கசமுசா புகைப்படங்களையும் வெளியிட்டார்.

லீலை

லீலை

சுசிலீக்ஸ் என்ற பெயரில் ட்விட்டரில் பிரபலங்களின் ஏகப்பட்ட அசிங்கமான வீடியோக்கள், புகைப்படங்கள் வெளியானது. தனுஷின் லீலை வீடியோவை வெளியிடப் போவதாக தெரிவித்தார் சுசி.

மீண்டும்

மீண்டும்

ட்விட்டரையே கதறவிட்ட சுசி தற்போது மீண்டும் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். பதற வேண்டாம். இம்முறை எந்த கசமுசாவும் இல்லை. அவர் பாடிய பாடலின் வீடியோ தான்.

பாடல்

ஜெய்சங்கர், ஜமுனா, நாகேஷ், குட்டி பத்மினி உள்ளிட்டோர் நடிப்பில் 1965ம் ஆண்டு வெளியான குழந்தையும் தெய்வமும் படத்தில் வரும் அன்புள்ள மான்விழியே பாடலை பாடி அந்த வீடியோவை தான் சுசி வெளியிட்டுள்ளார்.

சுசி

சுசி

சுசித்ராவின் ட்விட்டர் கணக்கு ஹேக் செய்யப்பட்டுவிட்டதாக தெரிவித்தார்கள். மேலும் சுசித்ராவுக்கு மனச்சிதைவு ஏற்பட்டுள்ளதாக அவரது கணவரே தெரிவித்தார். இந்நிலையில் பாடல் வீடியோவை வெளியிட்டுள்ளார் சுசி.

English summary
Singer Suchitra is back in track. She has releasd a video in which she is seen singing Anbulla Maanvizhiye song.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil