»   »  'என் தலைவன சொல்லியிருந்தா நீ பிரியாணிடி!' - வெங்கட்பிரபுவை எச்சரித்த பாடகர்!

'என் தலைவன சொல்லியிருந்தா நீ பிரியாணிடி!' - வெங்கட்பிரபுவை எச்சரித்த பாடகர்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை : வெங்கட்பிரபுவின் ப்ளாக் டிக்கெட் என்டர்டெயின்மென்ட் தயாரிப்பில் வைபவ், சம்பத், சனா அல்தாஃப், இனிகோ பிரபாகர் ஆகியோர் நடிக்கும் திரைப்படம் 'ஆர்.கே நகர்'. இந்தப் படத்தை சரவண ராஜன் என்பவர் இயக்குகிறார்.

இந்தப் படத்தின் டீசர் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டது. 'ஆர்.கே.நகர்' படத்தின் டீசரில் வழக்கமான வெங்கட்பிரபு டச் இருக்கிறது. கமலை சீண்டும் வசனங்கள் இடம்பெற்றிருப்பதாக பாடகர் க்ரிஷ் எச்சரித்துள்ளார்.

இந்த டீசரில் இடம்பெறும் வசனங்கள் கமல்ஹாசன், விஜய் ஆகியோரை கருத்தில்கொண்டு உருவாக்கப்பட்டிருக்கிறது எனவும் ரசிகர்கள் கூறி வருகிறார்கள்.

ஆர்கே நகர் பட டீசர்

இப்படத்தின் டீஸர் அண்மையில் வெளியாகி ஒருபக்கம் நன்றாக ஓடினாலும் படக்குழு மேல் ஒரு சிலர் கோபமாக உள்ளனர். 'ஆர்.கே.நகர்' படத்தில் சர்ச்சையைக் கிளப்பும் அரசியல் வசனங்கள் இடம்பெற்றிருக்கின்றன. இந்தப் படத்திற்கு ப்ரேம்ஜி அமரன் இசையமைத்துள்ளார். வெங்கட்பிரபுவின் அப்பா கங்கை அமரனும் பாடல்கள் எழுதியிருக்கிறார்.

நடிகன்னா ஓட்டு போட்ருவாங்களா

நடிகன்னா ஓட்டு போட்ருவாங்களா

'நடிகன்னா உனக்கு ஓட்டு போட்ருவாங்களா..? எம்.ஜி.ஆரா நீ..?' என வெங்கட் பிரபு தயாரித்துள்ள ஆர்.கே.நகர் படத்தின் டீஸரில் வரும் வசனம் மறைமுகமாக நடிகர் கமல்ஹாசனை பெயர் குறிப்பிடாமல் கலாய்க்கும் விதத்தில் இருப்பதாக பலரும் கூறி வருகின்றனர்.

நீ பிரியாணிடி

பாடகர் கிரிஷ் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில், கடைசியாக வந்த வசனம் புரியவில்லை, யாரை குறிவைத்து கூறியிருக்கிறீர்கள் வெங்கட் பிரபு, என் தலைவனை பற்றி இருந்தால் நீ பிரியாணி தான் என ட்வீட் செய்திருக்கிறார்.

படத்தை படமா பாரு

இதற்கு வெங்கட் பிரபு, 'எதுவாக இருந்தாலும் நேரில் பேசுவோம், படத்தைப் படமாக பார்க்க வேண்டும்' என பாடகர் க்ரிஷின் ட்வீட்டுக்கு பதில் கொடுத்துள்ளார்.

English summary
'RK Nagar' movie teaser released officially produced by Venkatprabhu. This teaser contains some controversy dialogues. Singer Krish tweeted about this, 'who you trying to mention?', Krish warns venkatprabhu.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil