கடைசி வரைக்கும் சிங்கிள் தான்... அதுவும் முரட்டு சிங்கிள்... ஸ்டிரிக்டா சொன்ன பிரேம்ஜி

சென்னை : கடைசி வரைக்கும் சிங்கிள் தான். அதுவும் முரட்டு சிங்கிளாக தான் இருக்க போறேன் என ஸ்டிரிக்டாக சொல்லி உள்ளார் நடிகர் பிரேம்ஜி. சமீபத்தில் அவர் அளித்த பேட்டியில் தனது திருமணம் பற்றிய கேள்விகளுக்கு கொஞ்சம் கடுப்பாகவே பதில் சொல்லி உள்ளார்.

காமெடி நடிகர், இசையமைப்பாளர், பாடகர் என பல திறமைகளைக் கொண்டவர் பிரேம்ஜி அமரன். இசையமைப்பாளர் கங்கை அமரனின் இரண்டாவது மகன். 43 வயதாகும் பிரேம்ஜி இதுவரை திருமணம் செய்து கொள்ளவில்லை. வீட்டில் பலமுறை வற்புறத்தியும், தனக்கு திருமண ஆசை இல்லை என கண்டிப்பாக சொல்லி விட்டாராம்.

இருந்தாலும் சமீபத்தில் வீட்டில் உள்ளவர்களின் விருப்பத்திற்கு திருமணத்திற்கு ஓகே சொல்லி உள்ளார் பிரேம்ஜி. இவருக்கு விரைவில் திருமணம் நடைபெற உள்ளதாக கங்கை அமரனே தெரிவித்தார். பெண்ணும் பார்த்து ஓகே செய்து விட்டதாக சொன்னார்கள். அதற்கு பிறகு அது பற்றி பேசாமல் இருந்த நிலையில் பிரேம்ஜி, இனி வாழ்க்கையில் கல்யாணமே இல்லை என சோஷியல் மீடியாவில் போஸ்ட் போட்டார். பிறகு பாடகி ஒருவருடன் பிரேம்ஜிக்கு காதல் என கிசுகிசு எழுந்தது. அதையும் அவர் மறுத்தார்.

நிஜ வாழ்க்கையில் மன்மதலீலை

நிஜ வாழ்க்கையில் மன்மதலீலை

இந்நிலையில் பிரேம்ஜி கண்ணாடி முன் அமர்ந்து, கவரில் வைக்கப்பட்டுள்ள கேள்விகளுக்கு, தன்னை தானே பார்த்து பேட்டி அளிக்கும் மிரர் இன்டர்வ்யூ ஒன்றில் கலந்து கொண்டு பேசினார். இதில் அவர், வாழ்க்கையில் கல்யாணம், லவ், உறவு என எதுவும் இல்லாமல் சிவனே என இருக்க தான் ஆசைப்படுகிறேன். அப்படி தான் இருக்கிறேன். இனியும் இருக்க போகிறேன். நிஜ வாழ்க்கையில் எந்த மன்மதலீலையும் கிடையாது.

சிம்பு தான் நடிக்க வச்சார்

சிம்பு தான் நடிக்க வச்சார்

யுவனுக்கு அசிஸ்டென்ட் மியூசிக் டைரக்டராக தான் இருந்து கொண்டிருந்தேன். சிம்பு தான் என்னை பார்த்து வல்லவன் படத்தில் நடிக்க சான்ஸ் கொடுத்தார். அவர் தான் என்னை நடிக்க வைத்தார். சென்னை 28 ல் நான் நடிப்பதற்கே சிம்பு தான் காரணம். அவர் தான் அண்ணன் வெங்கட் பிரபுவிடம் சொல்லி பிரேம்ஜியை நடிக்க வையுங்கள். சூப்பராக நடிக்கிறார் என்றார். சிம்பு கொடுத்ததற்கு பிறகு தான் அண்ணனே சான்ஸ் கொடுத்தார். அண்ணனின் படங்களில் ஒன்று நடிப்பேன் அல்லது மியூசிக் போடுவேன். மாறி மாறி பண்ணுவேன். மன்மத லீலை படத்தில் செய்ததை போல்.

பிரேம்ஜிக்கு மறக்க முடியாதது

பிரேம்ஜிக்கு மறக்க முடியாதது

சினிமாவில் எனது அடையாளம் இசை தான். இசை குடும்பத்தில் இருந்து வந்ததால் இசை வருகிறது. நடிப்பு சும்மா ஜாலிக்காக பண்ணுவது தான். இசைக்காகவே பிறந்தவன் என்று கூட சொல்லலாம். என் வாழ்க்கையில் எல்லாமே மறக்க முடியாதது தான். திருவண்ணாமலை சென்றிருந்த போது அருணாச்சலம் படத்தில் வருவதை போல் சிவ லிங்கத்தில் இருந்து ஒரு ருத்ராட்டசம் என்னிடம் ஓட வந்தது. அதை 12 வருடங்களாக என் கழுத்தில் போட்டுள்ளேன். அது மறக்க முடியாதது.

கடைசி வரை சிங்கிள் தான்

கடைசி வரை சிங்கிள் தான்

உங்களை கல்யாணம் பண்ணிக்க போற பெண்ணிடம் என்னவெல்லாம் எதிர்பார்க்றீர்கள் என்ற கேள்விக்கு பதிலளித்த பிரேம்ஜி, எதுவுமே கிடையாது. கல்யாணமே கிடையாது அப்புறம் என்ன. சும்மா, கல்யாணம்...கல்யாணம் என கேட்டுகிட்டு. பேரடிக்கல உங்களுக்கு. எந்த இன்டர்வ்யூ போனாலும் எப்ப கல்யாணம், எப்ப கல்யாணம் என்றே கேட்கிறிர்கள். கல்யாணமே கிடையாது. கடைசி வரை சிங்கிள் தான். முரட்டு சிங்கிள், கெழட்டு சிங்கிள் என்ன வேண்டுமானாலும் வச்சுக்கோங்க. அது தேவையே இல்லை. வாழ்க்கையில் என்ன தேவையோ அதை நோக்கி தான போக முடியும். தேவையில்லாத விஷயத்தை நோக்கி எதற்காக போக வேண்டும். பதில் சொல்லி சொல்லி எனக்கு போரடிக்குது.

பிரேம்ஜிக்கு பிடித்த நடிகை இவரா

பிரேம்ஜிக்கு பிடித்த நடிகை இவரா

35 வயது வரை கல்யாண மோகம் இருந்தது. காலண்டரில் இருக்கும் மகாலட்சுமியை போல் பொண்ணை கல்யாணம் பண்ணிக்க நினைத்தேன். அதற்கு பிறகு அதை விட, ஆன்மிகத்தில் அதிக ஆனந்தம் இருப்பதாக உணர்ந்ததால் கல்யாணம் பண்ணிக்க விரும்பல.என்னை பற்றி கிசுகிசு என்று எதுவுமில்லை. நான் வெளிப்படையான ஆள்.
பிடித்த ஹீரோயின்கள் மாறிக் கொண்டே இருக்கும். இப்போதைக்கு மாஸ்டர் ஹீரோயின் மாளவிகா மோகனன் பிடிக்கும். ரொம்ப அழகா இருக்காங்க.

 என்ன ஒரு விளக்கம்

என்ன ஒரு விளக்கம்

உங்களுடைய வாழ்க்கை சினிமா என்றால் U வா அல்லது A வா என்ற கேள்விக்கு பதிலளித்த பிரேம்ஜி. கண்டிப்பாக ஏ தான். எல்லோருடைய வாழ்க்கையும் ஏ தான். யு வாக யாராலும் வாழ முடியாது. நமக்கு ஏன் சர்டிஃபிகேட் என்பது அவரவருக்கு தெரியும். அவரவரின் போனுக்கு தெரியும். எனது வாழ்க்கை படத்திற்கு டைட்டில் என்னுடைய பெயர் தான் என தெரிவித்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X