»   »  'மீண்டும் ஒரு காதல் கதை' சிங்கிள் ட்ராக் ரிலீஸ்!

'மீண்டும் ஒரு காதல் கதை' சிங்கிள் ட்ராக் ரிலீஸ்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

மலையாள திரையுலகில் பெரும் வெற்றிபெற்ற 'தட்டத்தின் மறையத்து' படம் தமிழில் மீண்டும் ஒரு காதல் கதை என்ற பெயரில் ரீமேக் செய்யப்படுகிறது.

யாரடி நீ மோகினி, குட்டி, உத்தமபுத்திரன் படங்களை இயக்கிய மித்ரன் ஆர் ஜவஹர் இயக்கும் இப்படத்தில், அறிமுக நாயகன் 'வால்டர் பிலிப்ஸ்' கதாநாயகனாகவும், மலையாளத்தில் இந்த படத்தின் நாயகியாக நடித்த 'இஷா தல்வார்' கதாநாயகியாக நடித்துள்ளார். இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார்.

Single Track of meendum oru kadhal kadhai released

இவரது இசையில் பாடலாசிரியர் அருண் காமராஜ் எழுதிய "மைபோட்டு மைபோட்டு" பாடல் இன்று வெளியானது. இப்பாடல் திருமணச்சடங்கின் போது பாடப்படுவதாக அமைந்திருக்கிறது. 'ஆடுகளம்' படத்தின் 'ஒத்த சொல்லால' பாடல் புகழ், வேல்முருகனும் இந்தப் பாடலில் பாடியிருக்கிறார். இது அவரது முதல் மெலோடிப் பாடல்.

இப்பாடலுக்கு பிருந்தா மாஸ்டர் நடனம் அமைத்திருக்கிறார். படத்தின் நாயகன் வால்டர், தனது சகோதரியின் நடனப் பள்ளியில் படிக்கும் போதிலிருந்தே தனக்கு தெரியும் என்றும், கேரளாவில் படப்பிடிப்பு செய்யப்பட்ட இந்தப் பாடல் மிக அருமையாக வந்திருப்பதாகவும் கூறினார் பிருந்தா.

கலைப்புலி பிலிம்ஸ் இண்டர்நேஷனல் இப்படத்தினை உலகமெங்கும் வெளியிடுகின்றது.

English summary
The Single track of Meendum Oru Kadhal Kathai has been released today.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil