»   »  ஜெய்யும், அஞ்சலியும் நிஜமாகவே காதலர்கள் தானா?: இயக்குனர் பேட்டி

ஜெய்யும், அஞ்சலியும் நிஜமாகவே காதலர்கள் தானா?: இயக்குனர் பேட்டி

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: ஜெய்யும், அஞ்சலியும் நிஜத்தில் காதலிக்கிறார்களா என்பதை பலூன் படத்தில் நடித்தபோது கூட தன்னால் கண்டுபிடிக்க முடியவில்லை என்று இயக்குனர் சினிஷ் தெரிவித்துள்ளார்.

சினிஷ் இயக்கத்தில் ஜெய், அஞ்சலி, ஜனனி ஐயர் உள்ளிட்டோர் நடித்துள்ள ஹாரர் படம் பலூன். நிஜத்தில் காதலர்கள் என்று கிசுகிசுக்கப்படும் ஜெய்யும், அஞ்சலியும் படத்திலும் காதலிக்கிறார்கள்.

இது குறித்து இயக்குனர் கூறியதாவது,

ஜெய்

ஜெய்

பலூன் படத்தில் ஜெய், அஞ்சலிக்கு லவ் டிராக் உள்ளது. ஆனால் அவர்கள் நிஜ வாழ்க்கையில் காதலர்கள் தானா என்பதை அவர்களை இயக்கியும் என்னால் கண்டுபிடிக்க முடியவில்லை.

பலூன்

பலூன்

பலூன் படத்தில் ரசிகர்களுக்கு பிடித்த அனைத்து அம்சங்களும் உள்ளது. படம் கொடைக்கானலில் எடுக்கப்பட்டது. பிளாஷ்பேக் காட்சிகளில் ஜெய், ஜனனி ஐயர் காதல் காட்சிகள் இருக்கும்.

தலைப்பு

தலைப்பு

பிளாஷ்பேக் காட்சிகளில் ஜெய் பலூன் விற்பவராக வருவார். அதனால் தான் படத்திற்கு பலூன் என்று தலைப்பு வைத்துள்ளோம் என்று சினிஷ் தெரிவித்துள்ளார்.

திருமணம்

திருமணம்

ஜெய்யும், அஞ்சலியும் வரும் டிசம்பர் மாதம் திருப்பதியில் வைத்து திருமணம் செய்து கொள்ளப் போவதாக செய்திகள் வெளியாகின என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
Balloon director Sinish said that he is not able to find out whether Jai and Anjali are in love in real life.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil