யாழ் மீடியா கிராஃப்ட்ஸ் தயாரிப்பில் “OTP” – ஸ்ரீ தேவா நடிப்பில் வெளியானது ஃபர்ஸ்ட் லுக்!

சென்னை: யாழ் மீடியா கிராஃப்ட்ஸ் தயாரிப்பில் உருவாகி வரும் "OTP" படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று வெளியானது. இத்திரைப்படத்தை பாருக் அப்துல்லா இயக்கியுள்ளார்.

இந்த படத்தின் மூலம் விஜய் டிவியின் "சிறகடிக்க ஆசை" தொடரில் நடித்த ஸ்ரீ தேவா, ஹீரோவாக சினிமாவில் அறிமுகமாகிறார். அவருடன் பவித்ரா வெங்கட்ராமன், எட்வர்ட் கென்னடி, சத்யா மருதானி, கே.பி.யு. ராஜ்குமார், கவிராஜ், அரவிந்த் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

Siragadikka Aasai Sri Deva s OTP Movie first look out now

எட்வர்ட் கென்னடி, டிஎன்பிஎல் கிரிக்கெட் தொடரில் திருச்சி டீமின் பௌலிங் கோச், இந்த படத்தில் வில்லனாக நடித்துள்ளார்.

"OTP" ஒரு GenZ தலைமுறைக்கான ரொமான்ஸ் கிரைம் - காமெடி படம். காதல், டிஜிட்டல் உலகத்தின் ஆபத்தான மற்றொரு பக்கம் ஆகியவை கலந்த ஒரு சுவாரசியமான கதை.

படம் திருச்சி, சென்னை, மும்பை, மூணார் போன்ற பல இடங்களில் படமாக்கப்பட்டுள்ளது. திரைப்படத்தில் மூன்று பாடல்கள் இடம்பெறுகின்றன. சூர்யா ரவிச்சந்திரன் இசையமைத்துள்ளார், ஒளிப்பதிவு செய்துள்ளார் கவிமொழி. படம் தற்போது போஸ்ட் புரொடக்ஷன் கட்டத்தில் உள்ளது. விரைவில் டீசரும் டிரைலரும் வெளியாகவிருக்கின்றன.

இளைய குழுவால் உருவாக்கப்பட்ட இந்த படம், புதிய முகங்களின் புத்துணர்ச்சியுடன் ஒரு வித்தியாசமான அனுபவத்தை ரசிகர்களுக்கு தரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X