»   »  வீரம், வேதாளம் படங்களைத் தொடர்ந்து 3வது முறையாக சிறுத்தை சிவாவுடன் கைகோர்க்கும் அஜீத்

வீரம், வேதாளம் படங்களைத் தொடர்ந்து 3வது முறையாக சிறுத்தை சிவாவுடன் கைகோர்க்கும் அஜீத்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: இயக்குநர் சிறுத்தை சிவா இயக்கத்தில் அஜீத் 3 வது முறையாக நடிக்கப் போகிறார் என்று தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.

சிறுத்தை சிவா இயக்கத்தில் கடந்த வருடம் வீரம் திரைப்படத்தில் நடித்த அஜீத் தற்போது மீண்டும் சிறுத்தை சிவா இயக்கத்தில் வேதாளம் திரைப்படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார்.

2 படங்களிலும் சிறுத்தை சிவாவின் இயக்கம் மற்றும் கதை ஆகியவை அஜீத்தை மிகவும் கவர்ந்து விட்டதாகவும், அதனால் இன்னொரு படத்தில் நம் மீண்டும் இணையலாம் என்று அஜீத் கூறியதாகவும் சொல்லுகின்றனர்.

வீரம்

வீரம்

சிறுத்தை சிவா இயக்கத்தில் கடந்த ஆண்டு அஜீத் நடித்த வீரம் திரைப்படம் வெளியானது, பொங்கல் விருந்தாக வெளியான இந்தத் திரைப்படம் பாக்ஸ் ஆபிசிலும் நன்கு கல்லா கட்டியது.

வேதாளம்

வேதாளம்

வீரம் படத்தைத் தொடர்ந்து 2 வது முறையாக சிறுத்தை சிவா இயக்கத்தில் தற்போது அஜீத் நடித்துக் கொண்டிருக்கிறார். இந்தத் திரைப்படத்திற்கு வேதாளம் என்று பெயர் வைத்திருக்கின்றனர். நேற்று நள்ளிரவில் அஜீத்தின் அட்டகாசமான பர்ஸ்ட் லுக்குடன் வேதாளம் படத்தின் பெயர் வெளியானது.

தீபாவளி வெளியீடு

தீபாவளி வெளியீடு

போன ஆண்டு பொங்கலுக்கு வந்த இந்தக் கூட்டணி, இந்த ஆண்டில் தீபாவளிக்கு வருகின்றனர். தீபாவளி வெளியீடாக படம் வெளியாகும் என்று நேற்று அதிகாரப்பூர்வமாக அஜீத்தின் மேனேஜர் சுரேஷ் சந்திரா அறிவித்தார்.

ஹாட்ரிக்

ஹாட்ரிக்

வீரம், வேதாளம் படங்களைத் தொடர்ந்து 3 வது முறையாக சிறுத்தை சிவாவுடன், அஜீத் கைகோர்க்கப் போவதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. வேதாளம் படப்பிடிப்பில் இயக்குனர் சிவாவிடம் அஜித், "உங்களுடைய படப்பிடிப்பில் டென்ஷன் இல்லாமல் ரொம்ப ரிலாக்ஸா இருக்கேன். இன்னொரு கதை இருந்தால் சொல்லுங்க. பண்ணலாம்" என்று கூறியிருக்கிறார். இதனைக் கேட்டவுடன் இயக்குனர் சிவா மிகவும் நெகிழ்ந்து போய், "கண்டிப்பாக சார்" என்று தெரிவித்திருக்கிறார்.அஜித்தின் இந்த பேச்சால் மீண்டும் இயக்குனர் சிவாவுடன் மீண்டும் இணைந்து படம் பண்ணுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இறுதிக்கட்டத்தில் வேதாளம்

இறுதிக்கட்டத்தில் வேதாளம்

சிறுத்தை சிவா இயக்கத்தில் அஜீத் நடித்து வரும் வேதாளம் தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியிருக்கிறது. அஜித்துடன் இணைந்து சுருதிஹாசன், லட்சுமி மேனன், ராகுல் தேவ், கபீர் சிங், அஸ்வின், வித்யூலேகா உள்ளிட்ட பலர் இப்படத்தில் நடித்து வருகிறார்கள். அனிருத் இசையமைத்து வரும் இப்படத்தை ஏ.எம்.ரத்னம் தயாரித்து வருகிறார்.இப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு சென்னையில் நடைபெற்று வருகிறது. இதன் படப்பிடிப்பு முடிந்தவுடன், அக்டோபர் முதல் வாரத்தில் ஒரு பாடலைப் படமாக்க வெளிநாடு செல்ல படக்குழுவினர் திட்டமிட்டு இருக்கின்றனர்.

3 வது முறையாக அஜீத் - சிறுத்தை சிவா இணைவது அஜீத் ரசிகர்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

    English summary
    According to sources in kollywood, Siruthai Siva Who Earlier have the hit Veeram and Currently Directing Vedhalam, With Ajith Kumar will also be Joining Hands With the Actor for Third Time.

    சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil