அஜித்தின் புதிய பிளான்… லைகாவுக்கு No… சன் பிக்சர்ஸ்க்கு Yes… மீண்டும் சிவாவுடன் கூட்டணி?
சென்னை: அஜித் நடிப்பில் ஹெச் வினோத் இயக்கும் துணிவு திரைப்படத்தின் இறுதிக்கட்ட சூட்டிங் வேகமாக நடைபெற்று வருகிறது.
துணிவு பொங்கலுக்கு வெளியாகவுள்ள நிலையில், அதனைத் தொடர்ந்து விக்னேஷ் சிவன் இயக்கத்தில் ஏகே 62 படத்தில் நடிக்கிறார் அஜித்.
இந்நிலையில், அஜித்தின் 63வது படம் குறித்தும் அதன் இயக்குநர், தயாரிப்பாளர் பற்றியும் புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன.

விரைவில் ஏகே 62
அஜித்தின் துணிவு திரைப்படத்தை ஹெச் வினோத் இயக்கி வருகிறார். அஜித் - ஹெச் வினோத் கூட்டணி தொடர்ந்து மூன்றாவது முறையாக இணைந்துள்ள துணிவு, அடுத்தாண்டு பொங்கலுக்கு வெளியாகிறது. இந்தப் படத்தின் இறுதிக்கட்ட ஷூட்டிங் வேகமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இதனைத் தொடர்ந்து தனது 62வது படத்தில் இயக்குநர் விக்னேஷ் சிவனுடன் இணைகிறார் அஜித். விக்னேஷ் சிவன் - அஜித் கூட்டணியில் உருவாகும் 'ஏகே 62' படத்தை லைகா தயாரிக்கவுள்ளது குறிப்பிடத்தக்கது. இதன் படப்பிடிப்பும் விரைவில் தொடங்கும் எனக் கூறப்படுகிறது.

ஏகே 63 அப்டேட்
இந்நிலையில், ஏகே 62 படத்தை தொடர்ந்து அஜித் தனது அடுத்த இரண்டு படங்களையும் லைகா தயாரிப்பில் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியானது. ஏற்கனவே லைகா புரொடக்ஷன்ஸ் சுபாஸ்கரனையும் அஜித் நேரில் சந்திருத்திருந்தார். இதனால், அஜித்தின் ஏகே 62, ஏகே 63, ஏகே 64 என வரிசையாக 3 படங்கள் லைகாவுடன் தான் என எதிர்பார்க்கப்பட்டது. முன்னதாக போனி கபூர் தயாரிப்பிலும் நேர்கொண்ட பார்வை, வலிமை, துணிவு என மூன்று படங்களில் தொடர்ந்து அஜித் கமிட் ஆனது குறிப்பிடத்தக்கது. ஆனால், தற்போது அஜித்தின் ஏகே 63 படத்தை லைகா தயாரிக்கவில்லை என சொல்லப்படுகிறது.

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில்
அஜித்தின் 63வது படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்கவுள்ளதாக சமீபத்திய தகவல்கள் கூறுகின்றன. தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் ஜெயிலர் படத்தை தயாரித்து வரும் சன் பிக்சர்ஸ், அடுத்து அஜித்தின் 'ஏகே 63' படத்தை பிரம்மாண்டமாக தயாரிக்கவுள்ளதாக தெரிகிறது. முக்கியமாக இந்தப் படத்தை அஜித்தின் ஃபேவரைட் டைரக்டரான சிறுத்தை சிவா இயக்கவுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

கதை ரெடியா?
அண்ணாத்த படத்தை தொடர்ந்து சூர்யாவின் 42வது படத்தை இயக்கி வருகிறார் சிவா. அதன் பின்னரே அஜித்தின் படத்துக்காக திரைக்கதை எழுத உள்ளாராம். ஆனால், ஏற்கனவே அஜித் - சிவா இருவரும் ஒரு ஒன்லைனை முடிவு செய்துவிட்டதாகவும், அதுதான் ஏகே 63 படமாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது. வீரம், வேதாளம். விவேகம், விஸ்வாசம் என தொடர்ந்து 4 படங்களில் பணிபுரிந்த இந்தக் கூட்டணி, மீண்டும் இணையவுள்ளது ரசிகர்களிடம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.


Click it and Unblock the Notifications











