»   »  அடைமழையால் ரஜினி முருகன், ஈட்டி ரிலீஸ் ஒத்திவைப்பு

அடைமழையால் ரஜினி முருகன், ஈட்டி ரிலீஸ் ஒத்திவைப்பு

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னையில் விடாமல் கொட்டிவரும் அடைமழையால் நகரமே வெள்ளத்தால் சூழப்பட்டுள்ளது. பல தியேட்டர்களில் பொதுமக்கள் தஞ்சம் புகுந்துள்ளனர். இதனால் டிசம்பர் 4ம் தேதி வெள்ளிக்கிழமை ரிலீஸ் செய்யப்பட இருந்த சிவகார்த்திக்கேயனின் ரஜினி முருகன், அதர்வா நடித்த ஈட்டி படங்களின் ரிலீஸ் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் கடந்த திங்கட்கிழமை தொடங்கி விடாமல் மழை கொட்டி வருகிறது. 40 மணிநேரத்திற்கும் மேலாக விடாமல் கொட்டிய அடைமழையால் நகரம் முழுவதும் வெள்ளம் சூழ்ந்துள்ளது. இருப்பிடங்களை வெள்ளம் சூழ மக்கள் உடைமைகளை விட்டு சொந்த ஊரிலேயே அகதிகளாகும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். உறவினர்கள், நண்பர்கள் வீடுகளுக்குள் தஞ்சம் புகுந்துள்ளனர்.


முடங்கிய சென்னை

முடங்கிய சென்னை

சென்னையில் இருந்து தென் மாவட்டங்களுக்கு ரயில் மற்றும் பேருந்து போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளதால் சென்னையே தனித்தீவாக மாறியுள்ளது. வெள்ள நீரில் வீடுகள் மிதப்பதால் புறநகர் பகுதி மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் முடங்கியுள்ளது. தலைநகரமே ஸ்தம்பித்துள்ளது.


புகழிடம் அளிக்கும் திரையரங்குகள்

புகழிடம் அளிக்கும் திரையரங்குகள்

வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு வீடுகளை விட்டு வெளியேறிய மக்களுக்கு பல திரையரங்குகள் புகழிடமாக மாறியுள்ளன. தியேட்டர்களில் காட்சிகள் ரத்து செய்யப்பட்டு உணவுகள் தயாரிக்கப்பட்டு தஞ்சம் புகுந்தவர்களுக்கு அளிக்கப்பட்டு வருகிறது.


ரஜினி முருகன் ஒத்திவைப்பு

தொடர் மழை காரணமாக கடந்த இரு தினங்களாக பல திரையரங்குகளில் காட்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளன மக்கள் வீட்டை விட்டு வெளியே வர முடியாத சூழ்நிலை ஏற்பட்டிருப்பதால், வரும் 4ம் தேதி வெளியாக இருந்த ‘ரஜினி முருகன்' படத்தின் ரிலீஸ் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. மழை நின்று இயல்பு வாழ்க்கை திரும்பிய பிறகு ரஜினி முருகன் வெளியாகும் என திருப்பதி பிரதர்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.


எத்தனை தடவை தள்ளிப்போறது?

எத்தனை தடவை தள்ளிப்போறது?

சிவகார்த்திகேயன், கீர்த்தி சுரேஷ், பிரபு, சூரி மற்றும் பலர் நடிப்பில் இம்மான் இசையில் பொன்ராம் இயக்கத்தில் உருவான படம் ரஜினி முருகன். இப்படம் எப்போதோ தயாராகிவிட்டது. சிலபல சிக்கல்களால் பல மாதங்களாக வெளியாகாமல் இருந்தது. பெரும் பஞ்சாயத்திற்குப் பின் டிசம்பர் 4ம் தேதி வெளியாக இருந்தது. இப்போது மழையால் ரிலீஸ் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.


ஈட்டி ரிலீஸ் ஒத்திவைப்பு

இதேபோல அதர்வா, ஸ்ரீதிவ்யா நடித்த ஈட்டி படமும் டிசம்பர் 4ம் தேதி ரிலீஸ் ஆகவில்லை. வெள்ளத்தில் சிக்கித் தவிக்கும் மக்களுக்கு உதவுவோம் என்று கூறியுள்ள நடிகர் அதர்வா, ஈட்டி படத்தின் ரிலீஸ் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்று கூறியுள்ளார்.


English summary
Siva Karthikeyan’s Rajni Murugan movie release date is postponed due to the Chennai rains, Director of this movie is Ponram, It is Produced by Subash Chandrabose and Lingusamy

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil