»   »  "சிம்மக்கல் சேகர்".. பவர் ஸ்டாருடன் கை கோர்க்கும் சிவா!

"சிம்மக்கல் சேகர்".. பவர் ஸ்டாருடன் கை கோர்க்கும் சிவா!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: மசாலா படத்தைத் தொடர்ந்து மிர்ச்சி சிவா நடிக்கும் படத்தில் பவர் ஸ்டாருடன் இணைந்து, சிவா நடிக்கவிருக்கிறார் என்று உறுதியான செய்திகள் வெளியாகி இருக்கின்றன.

சிவா அடுத்ததாக கச்சேரி ஆரம்பம் படத்தின் இயக்குநர் திரைவண்ணனுடன் ஒரு புதிய படத்தில் கைகோர்க்கவிருக்கிறார். இப்படத்தில் இவருடன் இணைந்து பவர் ஸ்டார் சீனிவாசன் காமெடி செய்யப் போகிறார் என்று கூறுகின்றனர்.

Siva Next Team up with Thiraivannan

குடும்பப் படமாக காமெடி கலந்து உருவாகவிருக்கும் இப்படத்திற்கு சிம்மக்கல் சேகர் என்று படக்குழுவினர் பெயர் சூட்டியிருக்கின்றனர். ஜீவா - பூனம் பஜ்வா இணைந்து நடித்த கச்சேரி ஆரம்பம் படத்தை விட இதில் காமெடி தூக்கலாக இருக்குமாம்

சிவா மற்றும் பவர் ஸ்டாரைத் தவிர வேறு யாரெல்லாம் இந்தப் படத்தில் நடிக்கிறார்கள் என்பது குறித்து இன்னும் தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.

இப்படத்தின் படப் பிடிப்பானது தற்போது ஏவிஎம் ஸ்டுடியோவில் நடந்து வருகிறது. இந்த வருடத்தில் மசாலா படத்தின் மூலம் மீண்டு வந்த சிவா தற்போது அடுத்ததாக 144 படத்தின் வெளியீட்டுத் தேதியை எதிர்பார்த்துக் காத்திருக்கிறார்.

இப்படத்தை காக்கா முட்டை படத்தை இயக்கிய மணிகண்டன் இயக்கியிருக்கிறார். சிவாவுடன் இணைந்து அசோக் செல்வன், ஓவியா, ஸ்ருதி ராமகிருஷ்ணன் ஆகியோர் இப்படத்தில் நடித்திருக்கின்றனர்.

சி.வி.குமார் தயாரிப்பில் உருவாகியிருக்கும் 144 விரைவில் திரைகளைத் தொடலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

English summary
Mirchi Siva Next Team up with Katcheri Aarambam Fame Thiraivannan the Film Titled as Simmakkal Sekar. Power Star Srinivasan to Joins with Mirchi Siva in this Film.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil