»   »  ரெமோ படத்தின் பெயர் மாறுகிறதா.. வாய்ப்பே இல்லை

ரெமோ படத்தின் பெயர் மாறுகிறதா.. வாய்ப்பே இல்லை

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: ரெமோ படத்தின் பெயர் மாற்றப்படவில்லை என்று படக்குழு தெரிவித்துள்ளது.

தமிழ் திரைப்படம் வரி விலக்கு பெற வேண்டும் என்றால் அதன் பெயர் தமிழில் தான் இருக்க வேண்டும். ஆங்கிலம் சம்பந்தமாக இருந்தால் கூட அத்திரைப்படத்திற்கு வரி விலக்கு கிடைப்பது அரிதான ஒன்றாக உள்ளது.


Siva's movie name remains Remo only

இந்நிலையில் பாக்யராஜ் கண்ணன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் மற்றும் கீர்த்தி சுரேஷ் இரண்டாவது முறையாக ஜோடி சேர்ந்து நடித்துள்ள படம் ரெமோ. ரெமோ என்று பெயர் இருந்தால் வரி விலக்கு கிடைக்காது என்று கூறப்பட்டதாகவும், அதனால் படத்தின் பெயர் ரெங்கராஜன் என்ற மோகனா என மாற்றப்படுகிறது என்றும் செய்திகள் வெளியாகின.


இது சம்பந்தமாக படக்குழுவிடமிருந்து எந்த அறிவிப்பும் வெளிவராத நிலையில், சிவகார்த்திகேயனின் 24 ஸ்டுடியோ நிறுவனத்திடமிருந்து தற்போது ஒரு விளக்க அறிவிப்பு ஒன்று வந்துள்ளது.


அதாவது, ரெமோ என்பது கிறுத்துவ பெயராகும். அதோடு, இப்படத்தின் கதாபாத்திரத்தின் பெயரும் கூட. சிவாஜி, ரோமியோ ஜுலியட் போன்ற பெயர்கள் போல தான் ரெமோ என்ற பெயரும். அதனால் படத்தின் பெயரை மாற்ற வாய்ப்பு இல்லை என்று படக்குழுவினர் கூறிவிட்டனர்.


இப்படத்தில் சிவகார்த்திகேயன் போடும் நர்ஸ் வேடம் ஓரிரு காட்சிகளுக்காக மட்டுமில்லை. படத்தில் பெரும் பகுதியை இந்த நர்ஸ் வேடம் தான் ஆக்கிரமிப்பு செய்துள்ளதாம்.

English summary
According to reports, Sivakarthikeyan's Remo will have the same title and it won't be changed.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil