»   »  அஜீத் படங்களுக்கு 'வி' என்ற எழுத்தில் தலைப்பு ஏன்?: உண்மையை சொன்ன சிவா

அஜீத் படங்களுக்கு 'வி' என்ற எழுத்தில் தலைப்பு ஏன்?: உண்மையை சொன்ன சிவா

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: அஜீத்துடன் சேரும் படங்களுக்கு எல்லாம் 'வி' என்ற எழுத்தில் தலைப்பு வைப்பது குறித்து இயக்குனர் சிவா விளக்கம் அளித்துள்ளார்.

அஜீத், இயக்குனர் சிவா முதன் முதலாக கூட்டணி சேர்ந்த படம் வீரம். அதை அடுத்து வேதாளம் படத்தில் மீண்டும் கூட்டணி சேர்ந்தார்கள். வேதாளத்தை முடித்த பிறகு விவேகம் படத்திலும் இதே கூட்டணி தான்.

அஜீத், சிவா சேர்ந்தாலே அந்த படத்தின் தலைப்பு 'வி' என்ற எழுத்தில் துவங்குகிறது. இது குறித்து சிவா கூறியதாவது,

கதை

கதை

அஜீத் சாரை நினைத்துக் கொண்டு கதை எழுதுவேன். அதன் பிறகு அவரிடம் ஒருவரியில் கதை சொல்வேன். அவருக்கு அது பிடித்திருந்தால் அதை திரைக்கதையாக சொல்வேன்.

அஜீத்

அஜீத்

அஜீத் சாருக்கு நான் சொல்லும் திரைக்கதை பிடித்துவிட்டால் உடனே அடுத்த கட்ட பணிகளை துவங்குவேன். கதைக்கு ஏற்ற தலைப்புகளை எழுதி அஜீத் சாரிடம் காட்டுவேன்.

தலைப்பு

தலைப்பு

நான் பரிந்துரை செய்யும் தலைப்புகளில் கதைக்கு பொருந்தும் தலைப்பை அஜீத் சாரே தேர்வு செய்வார். மூன்று படங்களுக்கும் இப்படி தான் தலைப்பு தேர்வு செய்யப்பட்டுள்ளது.

வி

வி

எங்கள் படத்திற்கு வேண்டும் என்றே வி என்ற எழுத்தில் தலைப்பை தேர்வு செய்யவில்லை. எல்லாம் அதுவாக அமைகிறது அவ்வளவு தான் என்று சிவா தெரிவித்துள்ளார்.

English summary
Director Siva said he has not planned about the V titles for Ajith's movie. It is noted that Siva-Ajith combination movies' titles start with the letter V.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil