TRENDING ON ONEINDIA
-
ஒரே நேரத்தில் ஆலோசனை.. அமைச்சர்களுடன் முதல்வர்.. நிர்வாகிகளுடன் விஜயகாந்த்.. க்ளைமேக்ஸ் ரெடி?
-
சல்மான் கான் வழங்கிய 2 கோடி ரூபாய் காரை பயன்படுத்த மறுத்த தாய்... காரணம் தெரிந்தால் ஆச்சரியம் உறுதி
-
தரம் தாழ்ந்து போன ஸ்ரீ ரெட்டி: கண் கூசும் ஆபாச புகைப்படத்தை வெளியிட்டார்
-
எதிர்பார்த்த எல்லா இடத்துல இருந்தும் பணம் கிடைக்கப் போறது இந்த ஒரு ராசிக்காரருக்கு மட்டும்தான்...
-
2024: மும்பை - புனே வழித்தடத்தில் ஹைப்பர்லூப் போக்குவரத்து உறுதி.!
-
தெறிக்க விடும் மும்பை இந்தியன்ஸ் ட்ரைலர்.. ரோஹித், சச்சின், ஆகாஷ் அம்பானி மற்றும் பலர் நடிப்பில்!
-
குதிரைச் சாண அண்ணாசிப் பழம் 90,000 ரூபாயா..? அப்படி என்ன இருக்கு..!
-
பாதாமி பயண வழிகாட்டி - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி செல்வது
விஸ்வாசம் நிஜமாகவே ரூ. 125 கோடி வசூலா?: சிவா என்ன சொல்கிறார்?
சென்னை: விஸ்வாசம் படத்தின் வசூல் குறித்து இயக்குனர் சிவா பேசியுள்ளார்.
சிவா இயக்கத்தில் அஜித், நயன்தாரா உள்ளிட்டோர் நடித்த விஸ்வாசம் படம் ரிலீஸான 8 நாட்களில் தமிழகத்தில் மட்டும் ரூ. 125 கோடி வசூல் செய்ததாக கே.ஜே.ஆர். ஸ்டுடியோஸ் அறிவித்தது.
பேட்ட படம் தமிழகத்தில் ரூ. 100 கோடி வசூல் செய்தது என்று சன் பிக்சர்ஸ் கூறியதற்கு போட்டியாக கே.ஜே.ஆர். ஸ்டுடியோஸ் அளந்து விடுகிறது என்ற விமர்சனம் எழுந்தது.
நீ பார்த்த?
விஸ்வாசம் ரிலீஸான 8 நாட்களில் தமிழகத்தில் மட்டும் ரூ. 125 கோடி வசூல் செய்ய வாய்ப்பே இல்லை என்ற பேச்சு கிளம்பியது. மேலும் விஸ்வாசம் வசூல் குறித்து யார் அறிவிப்பு வெளியிட்டாலும் அதை பொய் பொய் என்று சமூக வலைதளங்களில் சிலர் தெரிவித்து வருகிறார்கள்.
வெளிநாடு
விஸ்வாசம் தமிழகத்திலும், ரஜினிகாந்தின் பேட்ட படம் வெளிநாடுகளிலும் ஆதிக்கம் செலுத்தியுள்ளது. ரஜினியின் கோட்டையான பி அன்ட் சி சென்டர்களை விஸ்வாசம் கைப்பற்றிவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
வசூல்
வசூல் தொடர்பாக சமூக வலைதளங்களில் பெரிய மோதல் நடந்து கொண்டிருக்கும்போது இது குறித்து இயக்குனர் சிவா பேட்டி ஒன்றில் பதில் அளித்துள்ளார். ஒரு படம் எவ்வளவு வசூல் செய்கிறது என்ற வியாபாரக் கணக்கை பார்த்தால் ரசிகரின் ரசிப்புத்தன்மை போய்விடும். அதனால் ரசிகர்கள் அதை பற்றி கவலை கொள்ளாமல் படம் பார்க்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
தயாரிப்பாளர்கள்
ஒரு படம் எவ்வளவு வசூல் செய்கிறது என்பது குறித்து ரசிகர்கள் அல்ல மாறாக தயாரிப்பாளர்கள் தான் கவலைப்பட வேண்டும். அது தொடர்பாக சமூக வலைதளங்களில் மோதிக் கொள்வது நல்லது அல்ல. பேட்ட, விஸ்வாசம் மோதவில்லை, சேர்ந்து வந்துள்ளது என்றே சிவா தெரிவித்ததை ரசிகர்கள் மனதில் கொள்ள வேண்டும்.