அடிபொலி.. அஸ்வினுக்காக இப்படியொரு காரியத்தை செய்த ஷிவாங்கி.. ஆனால், அது நடக்கலையே?

சென்னை: குக் வித் கோமாளி சீசன் 2 பிரபலங்களான அஸ்வின் மற்றும் ஷிவாங்கி இணைந்து பணிபுரியப் போகும் அசத்தலான அப்டேட் வெளியாகி இருக்கிறது.

விஜய் டிவியில் ஒளிபரப்பான கலகலப்பான சமையல் நிகழ்ச்சியான குக் வித் கோமாளி சீசன் 2வில் கலந்து கொண்ட அஸ்வின் மற்றும் ஷிவாங்கி ஜோடிக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது.

அந்த நிகழ்ச்சிக்கு பிறகு இருவரும் சினிமாவில் பிசியாகி வருகின்றனர்.

இருவரும் லவ்வர்ஸா

இருவரும் லவ்வர்ஸா

அஸ்வின் மற்றும் ஷிவாங்கி குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் நல்ல ஜோடிகளாக இருந்தனர். அஷாங்கி என ரசிகர்கள் இருவரையும் காதலர்களாகவே மாற்றி விட்டனர். மேலும், இருவரும் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்றும் ரசிகர்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர். ஆனால், காதல், திருமணம் குறித்து இருவருமே இதுவரை எந்தவொரு அறிவிப்பையும் வெளியிடாமல் நல்ல நண்பர்களாக இருந்து வருகின்றனர்.

ஹிட்டடித்த குட்டி பட்டாஸ்

ஹிட்டடித்த குட்டி பட்டாஸ்

பிகில் படத்தில் இடம்பெற்ற சிங்கப் பெண் பாடல் மூலம் பிரபலமான ரெபா மோனிகா ஜான் மற்றும் அஸ்வின் இணைந்து நடனமாடிய குட்டி பட்டாஸ் வீடியோ ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. தொடர்ந்து பல ஆல்பம் வீடியோக்களிலும் அஸ்வின் நடித்து வருகிறார்.

ஹீரோ அவதாரம்

ஹீரோ அவதாரம்

சினிமாவுக்குள் சின்ன சின்ன ரோல்களில் நடிக்கவே தன்னை பலரும் அணுகினர் என புலம்பி வந்த குக் வித் கோமாளி பிரபலம் அஸ்வின் குமார் என்ன சொல்ல போகிறாய் எனும் படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமாக உள்ளார். ஆனால், அந்த படத்தில் ஷிவாங்கி ஹீரோயினாக நடிக்கவில்லை என்பது ரசிகர்களுக்கு வருத்தம் தான்.

கவினுக்காக

கவினுக்காக

பிக் பாஸ் பிரபலமும் நடிகருமான கவின் நடிப்பில் வெளியான ஒரு ஆல்பம் வீடியோ பாடலில் நடிகை ஷிவாங்கி இடம்பெற்று இருந்தார். கவின் ஆல்பத்தில் ஷிவாங்கியும், அஸ்வின் தனி ஆல்பத்திலும் பணியாற்றி வருவதை பார்த்த ரசிகர்கள் இவர்கள் இருவரும் இணைந்து எப்போது தான் பணியாற்றுவார்கள் என எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருந்தனர்.

அடிபொலி

இந்நிலையில், ரசிகர்களின் நீண்ட நாள் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில் அஸ்வினுக்காக அடிபொலி எனும் பாடல் ஆல்பத்தில் ஷிவாங்கி பாடகியாக களமிறங்கி உள்ளார். இந்த தகவல் அறிந்ததும் அஷாங்கி ரசிகர்கள் #adipoli என்கிற ஹாஷ்டேக்கை பதிவிட்டு தெறிக்க விட்டு வருகின்றனர்.

அஸ்வினுக்காக

அஸ்வினுக்காக

பிரபல மலையாள நடிகர், பாடகர் மற்றும் தயாரிப்பாளரான வினீத் ஸ்ரீனிவாசன் உடன் இணைந்து அஸ்வினுக்காக அடிபொலி எனும் ஆல்பம் பாடலை ஷிவாங்கி பாடியுள்ளார். அதன் அறிமுக வீடியோ நேற்று வெளியானதும் குக் வித் கோமாளி ரசிகர்கள் கொண்டாட்ட மோடுக்கு வந்து விட்டனர். சிவப்பு மஞ்சள் பச்சை படத்திற்கு இசையமைத்த சித்து குமார் இந்த பாடலுக்கு இசையமைத்துள்ளார்.

ஷிவாங்கி ஜோடி இல்லை

ஷிவாங்கி ஜோடி இல்லை

அஸ்வினுக்காக ஷிவாங்கி குரல் கொடுத்தாலும் ஆனால், அவருடன் இணைந்து அவர் ஜோடியாக இந்த பாடலுக்கு ஆடப் போவதில்லை என்கிற தகவல் அஷாங்கி ரசிகர்களை சற்றே வருத்தமடைய செய்தாலும், இருவரும் இணைந்து பணியாற்றுவதால் ரசிகர்கள் மகிழ்ச்சியில் ஆழ்ந்துள்ளனர்.

Recommended Video

Ashwin படத்தில் நடிக்கும் Avantika Mishra யார்? | Enna Solla Pogirai, Shades of Kadhal
யார் ஜோடி

யார் ஜோடி

கன்னட படமான தியா படத்தின் மூலம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்த நடிகை குஷி ரவி தான் இந்த அடிபொலி பாடலில் அஸ்வின் குமார் உடன் இணைந்து ஜோடியாக நடனமாடப் போகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. கோலிவுட்டில் வெகு விரைவில் ஹீரோவாகப் போகும் அஸ்வின் இப்படி ஏகப்பட்ட வீடியோ பாடல்களில் ஒரு பக்கம் நடித்து ரசிகர்கள் வட்டத்தை அதிகரித்து வருகிறார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X