»   »  திரைத் துளி

திரைத் துளி

Subscribe to Oneindia Tamil

நடிகர் சங்க வளாகத்தில் எம்.ஜி.ஆர்.,சிவாஜி கணேசனுக்கு சிலை வைக்கப்படும் என்று தென்னிந்திய நடிகர் சங்கத்தலைவர் விஜயகாந்த் கூறினார்.

நடிகர் திலகம் சிவாஜி கணேசன் பிறந்த நாளை நேற்று நடிகர்கள் தினமாக நடிகர் சங்கம் கொண்டாடியது. நடிகர்சங்க அலுவலகத்தில் நடந்த இந்த விழாவில் விஜயகாந்த் தலைமை தாங்கினார்.

சிவாஜியின் 75-வது பிறந்த நாளையொட்டி 75 பேருக்கு வேட்டியும், 75 பேருக்கு சேலையும் வழங்கப்பட்டது.பின்னர் விஜயகாந்த் பேசுகையில்,

சிவாஜி ஆசைப்பட்டபடி இந்த சங்கம் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. அவருக்கு நினைவிடம் கட்டுவதற்காகஇடம் வழங்கியுள்ள முதல்வர் ஜெயலலிதாவுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறோம்.

நடிகர் சங்க வளாகத்தில் கலைவாணர் என்.எஸ். கிருஷ்ணனுக்கு சிலை உள்ளது. அடுத்த ஆண்டு நடிகர் தினவிழாவின் போது மக்கள் திலகம் எம்.ஜி.ஆருக்கும், நடிகர் திலகம் சிவாஜிக்கும்சிலை அமைக்கப்பட்டிருக்கும்.

அடுத்த ஆண்டு நடிகர் சங்கத்தின் பொன் விழா. இதை முதல்வர் தலைமையில் கொண்டாட முடிவு செய்துள்ளோம்என்றார் விஜயகாந்த்.

விழாவில் சரத்குமார், பிரபு, நெப்போலியன், சிவக்குமார், நாசர், மாதவன், முரளி உள்ளிட்ட நடிகர்கள், நடிகைகள்கலந்து கொண்டனர். விழாவுக்குப் பின் சிவாஜிக்கு நினைவிடம் கட்ட அடையாறில் அரசு ஒதுக்கியுள்ள இடத்தைவிஜயகாந்த் தலைமையில் நடிகர், நடிகைகள் நேரில் சென்று பார்வையிட்டனர்.

ஜெயாவை சந்தித்தார் பிரபு:

இதற்கிடையே சிவாஜி கணேசனுக்கு நினைவிடம் கட்டுவதற்கு இடம் ஒதுக்கியதற்காக ஜெயலலிதாவை நேரில்சந்தித்து நன்றி தெரிவித்தார் சிவாஜியின் மகனும், நடிகருமான பிரபு.

தலைமைச் செயலகத்தில் உள்ள அவரது அலுவலகத்தில் ஜெயலலிதாவை நேரில் சந்தித்து நன்றி தெரிவித்தபின்னர் பிரபு பின்னர் நிருபர்களிடம் கூறுகையில்,

அப்பாவின் நினைவிடத்திற்காக முதல்வர் 12 கிரவுண்ட் நிலம் ஒதுக்கியிருக்கிறார். அதற்காக அவரிடம் நன்றிதெரிவித்துக் கொண்டேன்.

அப்பா இருந்தபோதே ஜெயலலிதா அவர்கள் செய்த கெளரவத்தை எடுத்துக் கூறி பாராட்டு தெரிவித்தேன்.அப்பாவின் பெயரை எங்களது இல்லம் அமைந்துள்ள தெருவுக்கு சூட்டியதையும், செவாலியே விருதுபெற்றதற்காக அப்பாவுக்கு பாராட்டு விழா நடத்தியதையும் எடுத்துக் கூறி நன்றி கூறினேன்.

அம்மாவை மிகவும் விசாரித்தார் முதல்வர். விரைவில் நடிகர் சங்க பிரதிநிதிகள் அவரைப் பார்க்க உள்ளனர்.அதையும் முதல்வரிடம் எடுத்துரைத்தேன். கண்டிப்பாக அவர்களைச் சந்திப்பதாக ஜெயலலிதா உறுதியளித்தார்என்றார் பிரபு.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil