»   »  சிவாஜியை அவமானப்படுத்துவதா? - சத்யராஜுக்கு சிவாஜி பேரவை கண்டனம்!

சிவாஜியை அவமானப்படுத்துவதா? - சத்யராஜுக்கு சிவாஜி பேரவை கண்டனம்!

By Shankar
Subscribe to Oneindia Tamil
Sathyaraj
சென்னை: விஜய்யை பெருமைப்படுத்துவதாக நினைத்து நடிகர் திலகம் சிவாஜியை அவமானப்படுத்துவதா என நடிகர் சத்யராஜுக்கு சிவாஜி பேரவை கண்டனம் தெரிவித்துள்ளது.

சிவாஜி சமூக நலப் பேரவை தலைவர் கே.சந்திரசேகரன் இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:

நேற்று முன்தினம் 14-ந்தேதி நடைபெற்ற ஒரு சினிமா விழாவில் பேசிய நடிகர் சத்யராஜும், கமலா தியேட்டர் அதிபர் வி.என். சிதம்பரமும், நடிகர் திலகம் சிவாஜி கணேசனைப் பற்றி தவறான தகவலைக் கூறியுள்ளனர்.

நடிகர் விஜய் அரசியலுக்கு வரும் விஷயம் குறித்து கருத்துத் தெரிவித்த போது அரசியலில் சிவாஜி தோற்றவர், எனவே அவரை முன்னுதாரணமாகக் கொண்டு அரசியலுக்கு வரக் கூடாது என்று நடிகர் திலகம் சிவாஜி பற்றி அவதூறாகப் பேசியுள்ளனர்.

இது மிகவும் கண்டிக்கத்தக்கதாகும். மேடையில் உள்ளவர்களைப் புகழ வேண்டும் என்று நினைத்தால் எது வேண்டுமானாலும் புகழ்ந்து கொள்ளட்டும். ஆனால், மறைந்த நடிகர் திலகம் போன்றோரை வீணாக வம்புக்கு இழுத்தால் லட்சோபசட்சம் சிவாஜி ரசிகர்கள் கொதித்தெழுவார்கள்.

பெரியார், அண்ணா, காமராஜர் காலத்திலிருந்து அரசியலில் ஈடுபட்டு பலரை ஆளாக்கியவர், உருவாக்கியவர் சிவாஜி. அவர் ஒரு தேர்தலில்தான் தோல்வியடைந்தாரே தவிர அரசியலில் தோற்கவில்லை. அப்படி அவர் அரசியல் தோற்றவராக இருந்தால், தேர்தல் தோல்விக்குப் பிறகு, இந்தியாவை ஆண்டு கொண்டிருந்த ஒரு கட்சியின் மாநிலத் தலைவராக நியமிக்கப்பட்டிருக்கமாட்டார்.

திரையுலகிலும் சரி, அரசியல் உலகிலும் சரி, இவரால் பயனடைந்தவர்கள் பலர். யாரையும் அழிப்பது, கவிழ்ப்பது போன்ற சூது-வாது தெரியாதவர் சிவாஜி. திரையில் நடிகர் திலகமாக ஜொலித்த சிவாஜிக்கு அரசியல் மேடையில் நடிக்கத் தெரியாது. தான் சம்பாதித்த பணத்தில் கட்சி நடத்தியவர்.

அவரை முன்னுதாரணமாகக் கொண்டு அரசியலுக்கு வந்தாலே அரசியல் ஒரு சாக்கடை என்ற அவப் பெயர் நீங்கும். ஆனால், வெற்று விளம்பரங்களையும், வாய்ச் சவடால் பேச்சுக்களையும் நம்பும் சத்யராஜ், போன்றவர்களுக்கு வேண்டுமானால் இது தவறாகத் தோன்றலாம்.

ஆனால், எங்களைப் போன்ற லட்சோபலட்சம் சிவாஜி ரசிகர்களுக்கும், அரசியலைக் கூர்ந்து நோக்கும் நடுநிலையாளர்களுக்கும் இந்த உண்மை தெள்ளத் தெளிவாகத் தெரியும்.

மேடையில் வீராவேசமாகப் பேசிவிட்டு, வீட்டுக்குள் பதுங்கிக் கொள்ளும் நடிகர் சத்யராஜ் போன்றோருக்கு, உள்ளதைச் சொல்வேன், சொன்னதைச் செய்வேன், வேறொன்றும் தெரியாது என்று திரையில் மட்டுமல்ல, சொந்த வாழ்க்கையிலும் வாழ்ந்து காட்டி மறைந்த எங்கள் நடிகர் திலகம் பற்றி குறை கூறுவதற்கு எந்த அருகதையும் கிடையாது.

இனியும் அவ்வாறு தெரியாமல் அவதூறாகப் பேசினால், நடிகர் திலகம் சிவாஜி சமூக நலப் பேரவை அவர்களுக்கு எதிராக போராட்டம் நடத்தும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.

-இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts

    English summary
    Legendary actor Sivaji Ganesan's fan's forum condemned actor Sathyaraj for 'insulting' the actor in the audio release function of S A Chandrasekaran's Sattappadi Kutram. Remeber, Sathyaraj, one of the lead actors of the film says that Vijay should take MGR as his role model in politics, not Sivaji Ganesan.

    சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil

    We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Filmibeat sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Filmibeat website. However, you can change your cookie settings at any time. Learn more