»   »  4-வது தலைமுறை நடிகரைக் காணும் சிவாஜி குடும்பம்..!

4-வது தலைமுறை நடிகரைக் காணும் சிவாஜி குடும்பம்..!

Posted By:
Subscribe to Oneindia Tamil

திரிசூலம் படத்தில் 3 சிவாஜியைப் பார்த்திருப்போம்.. நவராத்திரியில் 9 சிவாஜியைப் பார்த்திருப்போம்... இப்போது சிவாஜி குடும்பத்தில் 4வது தலைமுறை நடிகர் ஒருவர் வந்திருக்கிறார்.. அவரைப் பார்க்கலாமா?

நடிகர் திலகம் சிவாஜி கணேசன் பராசக்தி திரைப்படம் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானார். அவரை தொடர்ந்து அவரது மகன்களான ராம் குமார் மற்றும் பிரபு.

இவர்களில் ஒருவர் சினிமாவில் தயாரிப்புத் துறையையும், மற்றொருவர் நடிப்பு துறையையும் தேர்ந்தெடுத்து இன்றுவரை சிறப்பாக செயல்பட்டு வருகின்றார்.

இளைய திலகம்

இளைய திலகம்

இதில் இளைய மகன் பிரபு இளைய திலகம் என்ற பட்டத்துடன் இன்றுவரை திரையுலகில் வெற்றிநடை போடுகின்றார். அவரது மகன் விக்ரம் பிரபு கும்கி திரைப்டத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமாகி, இன்று வரை ஒரு நல்ல நடிகனாக வலம் வருகின்றார்.

ராம்குமார்

ராம்குமார்

சிவாஜியின் மூத்த மகன் ராம்குமார் வாரிசான துஷ்யந்த் ராம்குமார் சிவாஜி தயாரிப்பு நிறுவனம் ஒன்றை நிறுவி திரைப்பட தயாரிப்பாளராக உள்ளார். இவர் தயாரிப்பாளர் ஆவதற்கு முன்னர் இரண்டு படங்களில் நடித்துள்ளார்.

3 தலைமுறை

3 தலைமுறை

சிவாஜி கணேசன் தலைமுறையின் அடுத்த தலைமுறையாக பிரபு மற்றும் ராம் குமார் திரையுலகில் வெற்றிபெற்றவர்களாக இன்று வரை விளங்குகின்றனர். மூன்றாவது தலைமுறையாக விக்ரம் பிரபு மற்றும் துஷ்யந்த் இவர்களை தொடர்ந்து நான்காவது தலைமுறையும் தற்போது நடிப்பு துறைக்கு அறிமுகமாகவுள்ளது.

நான்காவது தலைமுறை

நான்காவது தலைமுறை

நடிகர் திலகத்தின் அந்த நான்காவது தலைமுறை யார் தெரியுமா? விக்ரம் பிரபுவின் குட்டிப் பையன்தான் அடுத்த நட்சத்திரம். அவர் அறிமுகமாகவிருக்கும் திரைப்படம் என்ன என்பதை விரைவில் அதிகாரபூர்வமாக அறிவிக்கவிருக்கின்றனர். சிவாஜியின் கொள்ளு பேரனும் தன் தாத்தாவின் பெருமையை நிலைநாட்டுவாரா..? என்பதை நாம் பொறுத்திருந்து தான் பார்க்கவேண்டும்.

English summary
Actor Nadigar Thilagam Sivaji Ganesan's 4th Generation, Vikram Prabhu's Son Getting ready to Act in Tamil Cinema Industry.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil