»   »  தொடங்கின சிவாஜி மணி மண்டப பணிகள்... அடுத்த 6 மாதங்களில் திறப்பு!

தொடங்கின சிவாஜி மணி மண்டப பணிகள்... அடுத்த 6 மாதங்களில் திறப்பு!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: நடிகர் திலகம் என்று போற்றப்பட்ட சிவாஜி கணேசனுக்கு தமிழக அரசின் சார்பில் மணி மண்டபம் அமைக்கும் பணி தொடங்கியது.

பொதுப்பணித துறை இதற்கான வேலைகளை நேற்று தொடங்கியது.

Sivaji memorial construction starts

சிவாஜி கணேசனுக்கு மணிமண்டபம் கட்டப்படும் என கடந்த 2015ல் அப்போதைய முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார். இதற்காக, சென்னை, அடையாறு, சத்யா ஸ்டூடியோ அருகே இடம் தேர்வு செய்யப்பட்டது. ஆனால், நிதி ஒதுக்குவதில் ஏற்பட்ட தாமதத்தால் இதற்கான பணிகளை உடனடியாக துவங்க முடியாமல் போனது.

இந்நிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன் மணிமண்டபம் கட்ட ரூ.2.80 கோடி நிதி ஒதுக்கீடு செய்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டது. இதை தொடர்ந்து டெண்டர் விடப்பட்டு ஒப்பந்த நிறுவனம் தேர்வு செய்யப்பட்டது.

கடந்த டிசம்பர் 2ம் வாரத்தில் ஒப்பந்த நிறுவனம் மணிமண்டபம் கட்டுவதற்கான கட்டுமான பணிகளை தொடங்கியுள்ளது. இதற்கான பணிகளை 6 மாதத்திற்குள் முடிக்கவும் பொதுப்பணித்துறை திட்டமிட்டுள்ளது.

இந்த மணி மண்டபம் 2,124 சதுர அடியில் அமைக்கப்படுகிறது. நான்கு நுழை வாயில்கள் கொண்ட இந்த மண்டபத்தில் சிவாஜி கணேசனின் முழு உருவச் சிலை வைக்கப்படுகிறது.

மண்டபத்துக்குள் சிவாஜி கணேசன் வாழ்க்கை வரலாறு மற்றும் அவரது படங்களின் புகைப்படங்கள் அடங்கிய கண்காட்சி இடம்பெறும்.

6 மாதங்களுக்குள் இந்த மணிமண்டபம் அமைக்கும் பணி முடிவடைந்து திறக்கப்படும் என்று பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

English summary
The PWD of Tamil Nadu has started the memorial building work of late actor Sivaji Ganesan.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil