»   »  காலா படத்தில் சிவாஜி ராவ் கெய்க்வாட்: அது ரஜினி அல்ல

காலா படத்தில் சிவாஜி ராவ் கெய்க்வாட்: அது ரஜினி அல்ல

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: காலா படத்தில் சிவாஜி ராவ் கெய்க்வாட் என்று ரஜினியின் சொந்த பெயரில் ஒரு கதாபாத்திரம் உள்ளது.

சென்னை 28 படத்தில் ரூ.1 லட்சத்தை திருடிவிட்டு எஸ்கேப்பாகி இரண்டாம் பாகத்தில் அதனால் அசிங்கப்பட்டவர் அரவிந்த் ஆகாஷ். சென்னை 28-2 படத்தில் அவரின் கப் ஆசை நாசமாக போனாலும் காலா படம் மூலம் அவருக்கு ஜாக்பாட் அடித்துள்ளது.

காலா படத்தில் போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார் அரவிந்த் ஆகாஷ்.

சிவாஜி ராவ் கெய்க்வாட்

சிவாஜி ராவ் கெய்க்வாட்

காலா படத்தில் அரவிந்த் ஆகாஷ் கதாபாத்திரத்தின் பெயர் சிவாஜி ராவ் கெய்க்வாட். ஆமாம், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் நிஜப் பெயர் தான். காரணமாக தான் போலீஸ் அதிகாரிக்கு இந்த பெயரை வைத்துள்ளாராம் காலா இயக்குனர் பா. ரஞ்சித்.

அரவிந்த்

அரவிந்த்

காலா படத்தில் மராத்தி போலீஸ்காரராக நடிக்கிறேன். என் கதாபாத்திரத்தின் பெயர் சிவாஜி ராவ் கெய்க்வாட். படப்பிடிப்பில் கலந்து கொண்டு வருகிறேன். ஆனால் இதுவரை தலைவரை பார்க்கவில்லை என்கிறார் அரவிந்த்.

அருணாச்சலம்

அருணாச்சலம்

ரஜினியின் அருணாச்சலம் படத்தில் நான் குரூப் டான்ஸராக இருந்தேன். என் அம்மாவும் குரூப் டான்ஸர் தான். அவர் தலைவரின் வேலைக்காரன் படத்தில் வேலை செய்துள்ளார். அவரின் பெயர் சுசீலா பரிந்தர் கவுர். அவரை தீதி என்று அழைப்பார்கள் என்று அரவிந்த் தெரிவித்துள்ளார்.

ரஜினி

ரஜினி

கோவா பட காலத்தில் இருந்து எனக்கு பா. ரஞ்சித்தை தெரியும். காலா படத்தில் நடிக்க அவர் கேட்டதும் கொஞ்சமும் யோசிக்காமல் சரி என்று சொன்னேன். தலைவர் படத்தில் நடிக்க ஆளாளுக்கு ஏங்கும்போது எனக்கு கிடைத்த வாய்ப்பை ஏற்க மறுப்பேனா என்று கேட்கிறார் அரவிந்த்.

English summary
Arvind Akash is playing the role of a marathi policeman named Sivaji Rao Gaekwad. Yes, the character's name is Rajini's original name.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil