For Quick Alerts
  ALLOW NOTIFICATIONS  
  For Daily Alerts

  15 ஆண்டுகளை நிறைவு செய்த சிவாஜி...ஏவிஎம் நிறுவனம் என்ன செய்திருக்காங்க தெரியுமா?

  |

  சென்னை : ரஜினி நடித்த சிவாஜி படம் ரிலீசாகி இன்றுடன் 15 ஆண்டுகள் நிறைவடைந்து விட்டது. 2007 ம் ஆண்டு ஜுன் 15 ம் தேதி மிக பிரம்மாண்டமாக இந்த படம் ரிலீஸ் செய்யப்பட்டது.

  டைரக்டர் ஷங்கர் தயாரிப்பில் ரஜினி, ஸ்ரேயா, விவேக், மணிவண்ணன், சுமன் உள்ளிட்டோர் நடித்த படம் சிவாஜி : தி பாஸ். இந்த படத்தை ஏவிஎம் நிறுவனம் தயாரித்திருந்தது. ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருந்தார். இந்த படத்தில் பல்லேலக்கா பாடலுக்கு நயன்தாரா நடனம் ஆடி இருந்தார்.

  சுமார் 60 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இந்த படம் 152 கோடிகளை லாபமாக பெற்றது. ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்த 100 வது பாடல் மற்றும் பேக்கிரவுண்ட் மியூசிக் இந்த படம் தான். இந்த படம் விமர்சனம் ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றதுடன், கமர்ஷியல் ரீதியாகவும் வசூலை குவித்து, பெரும் வெற்றி பெற்றது.

  ஜுன் 15 ரஜினி வாழ்க்கையில் முக்கியமான நாள்...ஏன் தெரியுமா ? ஜுன் 15 ரஜினி வாழ்க்கையில் முக்கியமான நாள்...ஏன் தெரியுமா ?

  வசூல், விருதை குவித்த சிவாஜி

  வசூல், விருதை குவித்த சிவாஜி

  தேசிய விருது, ஃபிலிம்ஃபேர் விருது உள்ளிட்ட பல விருதுகளை பெற்ற இந்த படம் 2012 ம் ஆண்டு 3டி வடிவத்திற்கு மாற்றப்பட்டு, சிவாஜி 3டி என்ற பெயரிலும் வெளியிடப்பட்டது. இந்த படத்தின் பாடல்கள், காமெடி, டயலாக் என அனைத்தும் தற்போது வரை ரசிகர்கள் மனதில் நீங்காத இடம்பிடித்தவை.

  மாசான டயலாக்குகள்

  மாசான டயலாக்குகள்

  தி பாஸ், பேர கேட்டாலே சும்மா அதிருதில்ல, சிங்கப்பாதை, சிங்கம் சிங்கிளா தான் வரும் போன்ற டயலாக்குகள் மிகவும் பிரபலம். அதிக எதிர்பார்ப்புடன் ரிலீசான ரஜினி படங்களில் சிவாஜி படமும் ஒன்றும். வழக்கமான ஷங்கர் படம் என்றாலும், சற்று வித்தியாசமான கதையை காமெடி கலந்து சொல்லி இருப்பார்.

  சிவாஜியின் கதை

  சிவாஜியின் கதை

  வெளிநாட்டில் சம்பாதித்து விட்டு இந்தியாவிற்கு வந்து ஏழைகளுக்கு இலவச கல்வி, மருத்துவ வசதி, வேலைவாய்ப்பை ஏற்படுத்த நினைக்கும் சாஃப்ட்வேர் ஆர்கிடெக். இலவசமாக அனைத்தையும் வழங்கினால் தங்களின் வியாபாரம் படுத்தும் விடும் என பவரில் இருக்கும் சிலர் பல இடையூறுகளை கொடுக்கிறார்கள். லஞ்சம் கொடுத்தால் தான் காரியம் நடக்கும் என்பவர்களுக்கு பாடம் கற்றுக் கொடுக்கிறார் சிவாஜி. இதனால் சதி வலையில் சிக்க வைக்கிறார். அதிலிருந்து மீண்டு வந்து, தனது லட்சியத்தை அடையும் ஹீரோ தான் படத்தின் கதை.

  15 ஆண்டுகளை கொண்டாடி ஏவிஎம்

  15 ஆண்டுகளை கொண்டாடி ஏவிஎம்

  சிவாஜி படம் ரிலீசாகி இன்றுடன் 15 ஆண்டுகள் நிறைவடைகிறது. இதை கொண்டாடும் விதமாக, படத்தின் வெற்றி பயணத்தை குறிக்கும் விதமாக பழைய நினைவுகளை ரசிகர்களுக்கு கொண்டு சேர்க்கும் விதமாக படத்தின் படப்பிடிப்பு காட்சிகளை ஏவிஎம் நிறுவனம் வீடியோவாக வெளியிட்டுள்ளது.

  அட சூப்பரா இருக்கே

  அட சூப்பரா இருக்கே

  பாடல்களுக்காக ரஜினி நடன பயிற்சி எடுப்பது, வசனம் பேசி நடிப்பது, சண்டை காட்சிகள் எடுக்கப்பட்ட விதம் என தனித்தனியாக வீடியோவாக வெளியிட்டுள்ளது. அதோடு ரசிகர்கள், டைரக்டர் ஷங்கர் ஆகியோருக்கு நன்றி தெரிவித்து ஏவிஎம் சார்பில் சிறப்பு வீடியோ ஒன்றும் வெளியிடப்பட்டுள்ளது.

  ரஜினியை சந்தித்த ஷங்கர்

  ரஜினியை சந்தித்த ஷங்கர்

  சிவாஜி படம் ரிலீசாகி 15 ஆண்டுகள் ஆனதை முன்னிட்டு டைரக்டர் ஷங்கர், நடிகர் ரஜினிகாந்த் அவரது வீட்டிற்கே சென்று சந்தித்து, வாழ்த்து தெரிவித்துள்ளார். இவர்களின் சந்திப்பு போட்டோ சோஷியல் மீடியாக்களில் வெளியாகி டிரெண்டானது. அதோடு, ஷங்கரின் மகள் அதிதி ஷங்கரும் ரஜினியுடன் எடுத்துக் கொண்ட செல்ஃபியும் டிரெண்டானது.

  English summary
  Today Rajinikanth's Sivaji:The Boss completes 15 years of theatrical release. This movie was released on June 15th, 2007. It become blockbuster on that time and collects 152 crores. On this occassion, AVM released shooting spot videos for celebrating Sivaji.
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  X