twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    ரஜினியின் சிவாஜி 3 டி... ரசிகர்கள் பரவசம்... சிறுவர்கள் குதூகலம்!

    By Shankar
    |

    சூப்பர் ஸ்டார் ரஜினி நடிப்பில் 5 ஆண்டுகளுக்கு முன்பு வெளியாகி சூப்பர் ஹிட்டடித்த சிவாஜி, இப்போது 3 டியில் வெளியாகி கலக்கிக் கொண்டிருக்கிறது.

    ரஜினியின் ரசிகர்கள் தங்கள் தலைவரை தொட்டுவிடும் தூரத்தில் பார்த்து பரவசப்பட்டு வருகின்றனர்.

    5 ஆண்டுகளுக்கு முன்பு வந்த படம்

    5 ஆண்டுகளுக்கு முன்பு வந்த படம்

    ஷங்கர் இயக்கத்தில் ரஜினி, ஸ்ரேயா நடிப்பில் 2007-ம் ஆண்டு வெளியான படம் ‘சிவாஜி'. ரஜினியின் படங்களில் இதுவரை அவர் காட்டாத பல ஸ்டைல்களைக் காட்டியிருந்தார். வசூலில் புதிய சாதனை படைத்த சிவாஜி, உலக அளவில் வர்த்தகத்திலும் சரித்திரம் படைத்தது.

    தொழில்நுட்பம்...

    தொழில்நுட்பம்...

    தொழில்நுட்பத்தில் அன்றைக்கே பல புதுய உத்திகளுடன் வந்தது சிவாஜி. கறுப்பு ரஜினியை சிவப்பாகக் காட்டியதிலிருந்து, கிராபிக்ஸ் காட்சிகளை தத்ரூபமாக அமைத்தது வரை அனைத்திலுமே பல உத்திகளை ஷங்கரும் ஒளிப்பதிவாளர் கே வி ஆனந்தும் பயன்படுத்தியிருந்தனர்.

    3 டியில்...

    3 டியில்...

    இப்போது ரூ 18 கோடி செலவில் இந்தப் படத்தை 3 டி தொழில்நுட்பத்துக்கு மாற்றியுள்ளனர் ஏவி எம் நிறுவனத்தினரும் பிரசாத் லேபும். கிட்டத்தட்ட 400 தொழில்நுட்பக் கலைஞர்கள் இதற்காக ஒரு ஆண்டுக்கும் மேல் பாடுபட்டனர்.

    12.12.12-ல்...

    12.12.12-ல்...

    ரஜினியின் பிறந்த நாளான 12.12.2012 அன்று ரசிகர்களுக்கு பரிசாக இந்தப் படத்தை தியேட்டர்களில் மறு வெளியீடு செய்தது ஏவிஎம் நிறுவனம்.

    சென்னையில் மட்டும் 20 அரங்குகளில் இந்தப் படம் வெளியானது. வெளியிட்டவர்களே எதிர்ப்பார்க்காத அளவுக்கு அரங்கு நிறைந்த காட்சிகளாக படம் ஓடிக் கொண்டிருக்கிறது. போட்ட பணத்தை கிட்டத்தட்ட எடுத்துவிட்ட திருப்தி தயாரிப்பாளர்களுக்கு இப்போதே கிடைத்துவிட்டது.

    ரசிகர்கள் பரவசம்..

    ரசிகர்கள் பரவசம்..

    படத்தின் ஒவ்வொரு காட்சியுமே 3 டி தொழில்நுட்பத்தில் அமைந்துள்ளது ரசிகர்களைப் பரவசத்தில் ஆழ்த்தியுள்ளது. குறிப்பாக ரஜினி வரும் காட்சிகளில் சிறுவர்கள் உற்சாகத்தில் துள்ளிக் குதிக்கின்றனர்.

    தொட்டுவிடும் தூரத்தில் அவரைப் பார்ப்பதே தனி அனுபவமாக உள்ளது. இன்னொரு பக்கம் ஸ்ரேயாவின் அசத்தும் அழகு.

    ஸ்டைல் காட்சிகள்...

    ஸ்டைல் காட்சிகள்...

    ரஜினி கடித்து வீசி எறியும் ஆப்பிள் நம் முகத்தை நோக்கி வரும்போது, அத்தனை கைகளும் அதைப் பிடிக்க நீள்கின்றன. அதேபோல, திரையில் மிதக்கும் மலர் இதழ்கள் அப்படியே நம் மீது பொழிவது போன்ற உணர்வு. ரஜினி காசை சுண்டும் போதெல்லாம் அது நம் பாக்கெட்டில் விழாதா என ஏங்க வைக்கின்ற காட்சிகள்.

    அதிரடிக்காரன் அல்டிமேட்

    அதிரடிக்காரன் அல்டிமேட்

    வாஜி வாஜியும், சஹானாவும் மனதை வருடுகின்றன என்றால், அதிரடிக்காரன் பாடல்தான் படத்தில் அல்டிமேட் ஸ்டைல் பாடல் எனலாம். அதையும் 3 டியில் பார்க்கும்போது... ச்சும்மா அதிருதில்ல!

    நீளம் குறைப்பு...

    நீளம் குறைப்பு...

    சிவாஜி படத்தின் நீளம் 3 மணி 11 நிமிடங்கள். ஆனால் 3 டிக்காக 2.30 நிமிடங்களாக காட்சிகள் குறைக்கப்பட்டுள்ளன. குறிப்பாக, சர்ச்சையைக் கிளப்பிய அங்கவை-சங்கவை, வாங்க பழகலாம், கனல் கண்ணனுடன் ரஜினி மோதும் மியூசிக் ஷாப் சண்டை காட்சிகள் நீக்கப்பட்டுள்ளன.

    டால்பி அட்மாஸ் அட்டகாசம்...

    டால்பி அட்மாஸ் அட்டகாசம்...

    இந்தப் படத்தை டால்பி அட்மாஸ் ஒலி தொழில்நுட்பத்தில் பார்க்கும்போது, முற்றிலும் புதிய அனுபவம் கிடைக்கிறது. இந்திய சினிமாவைப் பொருத்தவரை ஆரம்பத்திலிருந்து கடைசி காட்சி வரை முழுமையான 3 டி அனுபவத்தைத் தந்துள்ள முதல் படம் ரஜினியின் சிவாஜி 3 டி தான்!

    English summary
    Sivaji - The Boss 3 D, the birthday gift from the Superstar gives a new experience in movie watching.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X