மீண்டும் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகும் சமந்தா.. இயக்குநர் யாரு தெரியுமா? வேறலெவல் தான் போங்க!
சென்னை: கோலிவுட்டின் யங் பாக்ஸ் ஆபிஸ் கிங்காக மாறியுள்ள சிவகார்த்திகேயன் உடன் நடிகை சமந்தா மீண்டும் ஜோடி சேரப் போகிறார் என தகவல்கள் வெளியாகி உள்ளன.
இயக்குநர் பொன்ராம் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வெளியான சீமராஜா படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக சமந்தா நடித்திருந்தார்.
இந்நிலையில், இயக்குநர் மடோன் அஸ்வின் இயக்கத்தில் உருவாக உள்ள புதிய படத்தில் இவர்கள் இருவரும் மீண்டும் இணைந்து நடிக்க உள்ளார்களாம்.

மாஸ் காட்டும் சிவகார்த்திகேயன்
டாக்டர் படத்தின் மிகப்பெரிய வெற்றியை தொடர்ந்து நடிகர் சிவகார்த்திகேயன் தமிழ், தெலுங்கு என செம பிசியான நடிகராக நடித்து வருகிறார். சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் டான் படத்தை முடித்துள்ள சிவகார்த்திகேயன் அடுத்ததாக பைலிங்குவல் படத்தில் நடித்து வருகிறார். நீண்ட நாட்களாக ரிலீஸ் ஆகாமல் காத்திருக்கும் அயலான், சிங்கப்பாதை, உள்ளிட்ட படங்களை தொடர்ந்து மடோன் அஸ்வின் இயக்கத்தில் புதிய படத்தில் நடிக்கப் போகிறாராம்.

மீண்டும் சமந்தா
சீமராஜா படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக செம க்யூட்டாக நடித்திருந்த சமந்தா மீண்டும் இந்த படத்தில் சிவகார்த்தியேன் உடன் ஜோடி போட்டு நடிக்கப் போகிறார் என தகவல்கள் வெளியாகி உள்ளன. தி ஃபேமிலி மேன் 2 தொடருக்கு பிறகு சமந்தாவின் மார்க்கெட் உச்சம் சென்றுள்ள நிலையில், இருவரும் இணைந்து நடித்தால் மிகப்பெரிய எதிர்பார்ப்பு எகிறும் என்பதில் சந்தேகமே இல்லை.

மண்டேலா இயக்குநர்
யோகி பாபு நடிப்பில் வெளியாகி மிகப்பெரிய அதிர்வலையை ஏற்படுத்திய மண்டேலா படத்தை இயக்கிய இயக்குநர் மடோன் அஸ்வின் இயக்கத்தில் தான் இந்த கூட்டணி மீண்டும் இணையப் போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. மேலும், வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல் இந்த படத்தை தயாரிக்கப் போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

ஞானவேல் ராஜா மீது வழக்கு
மிஸ்டர் லோக்கல் படத்திற்கு நடிகர் சிவகார்த்திகேயனுக்கு 15 கோடி ரூபாய் சம்பளம் பேசப்பட்டு வெறும் 11 கோடி ரூபாய் மட்டுமே கொடுத்ததாகவும் மீதமுள்ள 4 கோடி ரூபாய் சம்பள பாக்கியை தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா வழங்க வேண்டும் என நடிகர் சிவகார்த்திகேயன் சமீபத்தில் தொடுத்த வழக்கு கோலிவுட்டில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது.
Recommended Video

சம்பளம் எவ்வளவு
மிஸ்டர் லோக்கல் படத்திற்கே சிவகார்த்திகேயனுக்கு 15 கோடி ரூபாய் சம்பளமா? என கோலிவுட்டே ஆச்சர்யத்தில் வாய் பிளந்து நிற்கிறது. டாக்டர், டான் மற்றும் டோலிவுட் படத்திற்கெல்லாம் சிவகார்த்திகேயன் எவ்வளவு வாங்குகிறார் என்றும் கணக்கு போட்டு வருகின்றனர். ஜதிரத்னலு இயக்குநர் அனுதீப் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வரும் படத்திற்கு 25 கோடி ரூபாய் சம்பளம் என்கின்றனர்.


Click it and Unblock the Notifications











