Madharaasi Day 5 Box Office: மதராஸி 5வது நாள் வசூல்.. SK போட்ட ஆக்ஷன் ஸ்கெட்ச்.. குறையில்லாத வசூல்!
சென்னை: சிவகார்த்திகேயன் என்றாலே காமெடி, ஜனரஞ்சகமான குறிப்பாக காமெடிக்கு அதிக முக்கியத்துவம் இருக்கும் படங்களில் தான் அதிகம் நடிப்பார். இப்படி இருக்கையில் அமரன் படத்தினை ஆக்ஷன் படம் என்று வகையறை செய்ய முடியாது என்றாலும், வீரமரணம் அடைந்த மேஜர் முகுந்த் வரதராஜினின் வாழ்க்கை வரலாற்றை மையமாகக் கொண்டு படம் எடுக்கப்பட்டதால் அந்த படத்தில் அதிரடி ஆக்ஷன் காட்சிகள் இடம் பெற்றிருந்தது. இப்படி இருக்கையில் சிவகார்த்திகேயனின் அதிரடி ஆக்ஷன் படம் என்றால் அது மதராஸி தான்.
யு / ஏ சான்றிதழ் அதுவும் 16 வயதுக்கு மேற்பட்டவர்கள் தான் இந்த படத்தை பார்க்க அனுமதிக்க வேண்டும் என்கிற லெவலுக்கு இறங்கி ஆக்ஷன் காட்சிகளில் நடித்துள்ளார் என்றாலே புரிகிறது, சிவகார்த்திகேயன் ஆக்ஷன் கதாநாயகனாக மாற தீர்க்கமாக முடிவெடுத்துவிட்டார் என்பது. அதற்கு ஏற்றது போல மதராஸி படத்தில் மிகவும் ஆக்ரோஷமாக சண்டைக் காட்சிகளில் நடித்துள்ளார். இந்த படம் வெளியாகி இன்றோடு அதாவது செப்டம்பர் 10ஆம் தேதியுடன் ஆறு நாட்கள் ஆகிறது. இப்படி இருக்கையில் முதல் ஐந்து நாளில் படத்தின் வசூல் என்ன என்பது குறித்து இந்த தொகுப்பில் காணலாம்.

படக்குழு: ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் உருவான மதராஸி படத்தில் சிவகார்த்திகேயன், ருக்மிணி வசந்த், பிஜு மேனன், வித்யூத் ஜாமவால், விக்ராந்த், ஷபீர் என பல நட்சத்திரங்கள் நடித்துள்ளார்கள். படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். தமிழ்நாட்டில் துப்பாக்கி கலாச்சாரத்தை கொண்டு வர நினைக்கும் வில்லனுக்கும் அதைத் தடுக்க போராடும் என்.ஐ.ஏ அதிகாரிகளுக்கும் இடையில் நடக்கும் போராட்டத்திற்கு இடையில் சிவகார்த்திகேயனும் அவரது காதலியும் எப்படி சிக்கிக் கொண்டார்கள்? அவர்கள் அதில் இருந்து மீண்டு வந்தார்களா இல்லையா? துப்பாக்கி கலாச்சாரத்தை வில்லன்கள் உருவாக்கினார்களா இல்லையா என்பதுதான் படத்தின் கதை.
சொதப்பல் திரைக்கதை: கதையாக படத்திற்கு டிக்ஸ்டிங்ஸ்ஷன் லெவலுக்கு மார்க் கொடுத்தாலும் படத்தின் திரைக்கதையில், இது உண்மையாலுமே ஏ.ஆர். முருகதாஸ் படமா என்று பலரும் கேட்கும் அளவுக்கு டம்மி பாவா ஸ்டைலில் திரைக்கதையை அமைத்துள்ளார். சண்டைக் காட்சிகளுக்கு முக்கியத்துவம் கொடுத்ததைப் போல திரைக்கதையில் இன்னும் கொஞ்சம் ஒர்க்-அவுட் செய்திருந்தால் படம் துப்பாக்கி படத்தைப் போல ஏ.ஆர். முருகதாஸ்க்கு பெயர் வாங்கிக் கொடுத்திருக்கும் ஆனால், திரைக்கதை சொதப்பலால், ஒரு படைப்பாளியாக ஜெஸ்ட் பாஸ் ஆகி நிற்கிறார். அனிருத் இசை என்றாலே ட்ரேட் மார்க் இசையாக மாறிவிட்ட நிலையில், இந்த படத்திற்கு அவரது மெலடிகள், சுதீப் இளமோனின் கேமராவுக்கு நியாயம் சேர்ப்பதாக இல்லை.

வசூல் விபரம்: படம் வெளியாகி இன்றுடன் 6 நாட்கள் ஆகிவிட்டது. படம் முதல் நாளில் தமிழ்நாட்டில் மட்டும் சுமார் 12.8 கோடிகள் வசூலித்ததாக படக்குழு அறிவித்தது. அதேபோல் இரண்டு நாட்களில் படம் ரூபாய் 50 கோடிகளை உலகம் முழுவதும் வசூலித்ததாக படக்குழு அதிகாரப்பூர்வமாக தெரிவித்தது. இப்படி இருக்கையில் படம் முதல் ஐந்து நாளில் இந்தியாவில் மட்டும் சுமார் ரூபாய் 44.45 கோடிகளை வசூல் செய்துள்ளது என சாக்நிக் வலைதளம் தெரிவித்துள்ளது. இது மட்டும் இல்லாமல் ஐந்தாவது நாளில் மட்டும் இந்தியா முழுவதும் தோராயமாக ரூபாய் 3.15 கோடிகளை வசூல் செய்துள்ளது எனவும் அந்த வலைதளம் குறிப்பிட்டுள்ளது.


Click it and Unblock the Notifications











