Madharaasi Official Box Office: SKவுக்கு குறையாத மவுசு.. முதல் நாளே அள்ளித் தந்த தமிழ்நாடு.. எத்தனை கோடிகள்?
சென்னை: சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி நேற்று அதாவது செப்டம்பர் 5ஆம் தேதி ரிலீஸ் ஆன படம் மதராஸி. ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் வெளியான இந்த படத்தை ஸ்ரீ லக்ஷி மூவீஸ் தயாரித்துள்ளது. மேலும் படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். ருக்மினி வசந்த், பிஜு மேனன், வித்யூ ஜமால் என பெரும் நட்சத்திர பட்டாளமே நடித்த இந்த படத்தின் முதல் நாள் வசூல் எவ்வளவு என்பதை படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. அதாவது படம் முதல் நாளில் தமிழ்நாட்டில் மட்டும் ரூபாய் 12.8 கோடிகளை வசூல் செய்து அள்ளி உள்ளது. மேலும் இந்த வசூல் என்பது கிராஸ் கலெக்ஷன் ஆகும். இதனால் படக்குழு உச்சகட்ட மகிழ்ச்சியில் உள்ளது.

மேலும் படத்தின் வசூல் என்பது இந்தியா அளவிலும் உலக அளவிலும் கணக்கிடும்போது படத்தின் வசூல் மொத்த படக்குழுவையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தும் அளவுக்கு உள்ளது என கூறப்படுகிறது. தற்போது படக்குழு வெளியிட்டுள்ள இந்த அதிகாரப்பூர்வ தகவல் என்பது படக்குழுவை மட்டும் இல்லாமல் சிவகார்த்திகேயனின் ரசிகர்களையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இது தொடர்பாக அதிகாரப்பூர்வமாக அறிவித்த படக்குழு தமிழ்நாடு ரசிகர்களுக்கு நன்றியையும் தெரிவித்துள்ளது.
மதராஸி: சிவகார்த்திகேயன் நடிப்பில் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் உருவான இந்த படத்தின் மீது பெரும் எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் இருந்தது. படம் முழுக்க ஆக்ஷன் காட்சிகளால் நிறைந்த இந்த படத்தின் புக்கிங் ஸ்லோவாக இருந்தது. ஆனால் படத்தின் முதல் காட்சி முடிந்து ரசிகர்கள் கொடுத்த ரியாக்ஷனுக்குப் பின்னர் படத்தின் புக்கிங் எகிறியது. படத்திற்கு முதல் நாளில் இந்தியா முழுவதும் ரூபாய் 13 கோடிகள் வசூலித்திருக்கும் என்று பாக்ஸ் ஆபீஸ் தகவல்களை வெளியிடும் சாக்நிக் வலைதளம் தோராயக் கணக்கு என்று காலையில் தெரிவித்திருந்தது. ஆனால் படம் தமிழ்நாட்டில் மட்டும் ரூபாய் 12.8 கோடிகள் கிராஸ் கலெக்ஷனாக வசூலித்துள்ளது என்ற தகவல் ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
லாபத்தில் பங்கு: சிவகார்த்திகேயனைப் பொறுத்தவரையில் இந்த படத்தில் கமிட் ஆகும்போது அவர் தனது அடிப்படைச் சம்பளமான இரட்டை இலக்கத்தில் கோடிகளில் சம்பளம் வாங்கிக் கொண்டார் என்று கூறப்படுகிறது. அதேநேரத்தில் படம் வெளியாகி வசூல் செய்த பின்னர் லாபத்தில் பங்கு பெற்றுக் கொள்கிறேன் என்று அவர் தெரிவித்தது தயாரிப்பாளருக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில் படம் சுமார் ரூபாய் 300 கோடிகளுக்கு மேல் வசூலித்தால் அமரன் படத்தின் வசூலை நெருங்கியது போல இருக்கும். அதேபோல் சிவகார்த்திகேயனுக்கு கிடைக்கும் பங்கும் அவருக்கு திருப்திகரமானதாக இருக்கும் என்றும் கூறப்பட்டு வருகிறது.
முதல் நாள் வசூல்: மதராஸி படத்தின் முதல் நாள் வசூல் எவ்வளவு என்பதை படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. அதாவது படம் முதல் நாளில் தமிழ்நாட்டில் மட்டும் ரூபாய் 12.8 கோடிகளை வசூல் செய்து அள்ளி உள்ளது. மேலும் இந்த வசூல் என்பது கிராஸ் கலெக்ஷன் ஆகும். இதனால் படக்குழு உச்சகட்ட மகிழ்ச்சியில் உள்ளது. படம் உலகம் முழுவதும் எவ்வளவு வசூலித்தது என்ற கணக்கை இந்த வார இறுதி நாட்கள் முடிந்த பின்னர் படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications











